ஊராங்க இது.. மக்கள் நடமாட முடியலையே! போலீஸை ட்யூட்டி பார்க்க விடுங்க! ஸ்டாலினுக்கு அண்ணாமலை அட்வைஸ்
சென்னை: சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்
திமுக அரசு, இனியும் காவல்துறையினரை, அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சமூக விரோதிகளுக்கு எதிராக பயன்படுத்த வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்சி வருகிறது. குறிப்பாக சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று ஒரே நாளில் எட்டு இடங்களில் செயின்பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் செயின்பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திரா என்ற காவலர் பணி முடிந்து தனது வீட்டுக்குச் சென்ற போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த இளைஞர்கள் அவரது செயினை பறித்து சென்றனர். ஒரே நாளில் சென்னையில் எட்டு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால் குற்றவாளிகளை கைது செய்ய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், திமுக அரசு, இனியும் காவல்துறையினரை, அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சமூக விரோதிகளுக்கு எதிராக பயன்படுத்த வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர், சீருடையில் இருக்கும்போதே அவரது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு சென்றிருக்கின்றனர். திமுக அரசு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் பாஜக தொண்டர்களைப் பின்தொடர்வதையே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியதன் விளைவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண் காவலரிடமே செயின் பறிப்புச் சம்பவம் நடக்கும் அளவுக்கு, தமிழக மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
திமுக அரசு, இனியும் காவல்துறையினரை, அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சமூக விரோதிகளுக்கு எதிராக, காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். காவல்துறையினரும், திமுகவின் அதிகார துஷ்பிரயோகங்களைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் முதற்கடமையான சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications