சென்னையில் வேலைக்கு சேர்ந்த 10வது நாளிலேயே 11 லட்சம்.. வீட்டு ஓனருக்கு ட்விஸ்ட்.. சிக்கிய பெண்
சென்னை: சென்னையில் வீட்டு வேலை செய்யும் பலர் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்களின் பணி திறனை பாராட்டி, வீடு கட்டி கொடுப்பது, குடும்பத்தில் ஒருவராக பார்ப்பது, அவர்களின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுக் கொள்வது, வேலைக்கார பெண்களின் குடும்பத்திற்கு மருத்துவ உதவிகள் செய்வது என பல உதவிகளை செய்கிறார்கள்.. ஆனால் ஒரு சிலர் வேலை செய்யு வீட்டிலேயே கைவரிசை காட்டுகிறார்கள். வேலைக்கு சேர்ந்த 10 நாளிலேயே 14 சவரன் தங்க நகை திருடியதாக பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் வீட்டு வேலை பணியாளர்களின் உழைப்பு அசாத்தியமானது. பலரும் ஐடி வேலை உள்பட பல்வேறு வேலைகளுக்கு சென்றுவிடுகிறார்கள். அவர்கள் வேலைக்கு செல்லும் நிலை காரணமாக சமையல் செய்து கொள்ள முடியாதநிலையில் இருக்கிறார்கள். இதன் காரணமாக வீடுகளில் வேலைக்கு பணியாளர்களை சேர்த்துக் கொள்கிறார்கள். அதேபோல் பெரும் செல்வந்தர்களும் தங்கள் வீடுகளில் வீட்டு வேலைக்கு பணியாளர்களை சேர்த்துக் கொள்கிறார்கள்.

இன்றைக்கு வீட்டு வேலை பணியாளர்கள் தான் பல பேச்சுலர்கள் நல்ல உணவு சாப்பிட காரணமாக இருக்கிறார்கள். பல செல்வந்தர்களின் வீடுகளில் குழந்தைகளை வளர்ப்பதே வீட்டு வேலை பணியாளர்கள் தான். வீட்டு வேலை பணியாளர்களின் உழைப்பு மற்றும் பணியில் அவர்கள் காட்டும் அக்கறை மற்றும் நேர்மையை பாராட்டி அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பல செல்வந்தர்கள் செய்து கொடுக்கிறார்கள். பல பணக்காரர்கள் தங்களிடம் நேர்மையாக உள்ள வேலைக்கார பணியாளர்களுக்கு தங்க நகை, பணம், பரிசு,கல்வி உதவி தொகை, மருத்துவ உதவி போன்ற பல்வேறு உதவிகளை செய்கிறார்கள். அதேநேரம் சில பணியாளர்கள் வீட்டில் வேலை செய்யும் வீட்டிலேயே கைவரிசை காட்டுகிறார்கள்.
சென்னை நொளம்பூர் அண்ணாமலை அவென்யூ பகுதியில் 65 வயதாகும் ரங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார்.இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர் ஆவார். ரங்கராஜின் வீட்டில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 23 வயதாகும் ரிங்கு முகர்ஜி என்ற இளம்பெண் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.
ரங்கராஜ் கடந்த 23-ந் தேதி வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை சரி பார்த்தபோது அதில் 14 சவரன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ரங்கராஜ் அளித்த புகாரின்பேரில் நொளம்பூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த ரிங்கு முகர்ஜிதான் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 14 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications