சென்னை பெரம்பூரில் வீட்டை பூட்டி சாவியை வைத்த சுகுமார்.. பின்னாடியே வந்த இந்துமதி.. ட்விஸ்ட்
சென்னை: சென்னையில் மக்கள் பலர் வீடுகளை பூட்டி சாவியை மறைவான இடத்தில் வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். வீட்டில் உள்ளவர்களுக்கு அந்த இடங்கள் தெரியும். மற்றவர்களால் எளிதில் அடையாளம் காண முடியாது. ஆனால் சென்னை பெரம்பூரில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, சாவிகளை எடுத்து திருடிய பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னையில் பூட்டிய வீடுகளை குறிவைத்து திருடும் பெண்கள், ஆண்கள் அதிகம். குறிப்பாக ஏழைய எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தான் போய் திருடுகிறார்கள். சந்தேகப்படாத அளவிற்கு சுற்றுகிறார்கள். தனியாக உள்ள வீடுகள், சிசிடிவி கேமரா இல்லாத வீடுகள் ஆகியவற்றை குறிவைத்து திருடுவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளார்கள். சந்தேக இல்லாத அளவிற்கு திருடுவதற்காக, வீடுகளை உரிமையாளர்கள் பூட்டுவதை நோட்டமிடுகிறார்கள்.

பின்னர் சாவியை வைக்கும் இடத்தையும் நோட்டமிடுகிறார்கள். இறுதியாக திருடுகிறார்கள். இப்படிப்பட்ட திருட்டை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், அக்கம் பக்கம் சிசிடிவி வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கண்டுபிடிப்பது சிரமம் ஆகிவிடும். அப்படி நகைகளை, பணத்தை பறிகொடுத்த மக்கள் பலர் இருக்கிறார்கள். சென்னை பெரம்பூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
சென்னை பெரம்பூர், வெங்கட்ராமன் தெருவில் சுகுமாரன் என்பவர் வசித்து வருகிறார். சுகுமாரன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிக்கொண்டு, சாவியை வீட்டின் வெளியே மறைவான இடத்தில் வைத்து விட்டு வெளியே சென்றிருந்தார். இதை மர்ம பெண் ஒருவர் நோட்டமிட்டார். பின்னர் வீட்டில் புகுந்து பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச்சென்று விட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சோரி பகுதியைச் சேர்ந்த இந்துமதி (வயது 35) என்பவர் ரயில் மூலம் சென்னைக்கு வந்து பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.
செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் இந்துமதியை கைது செய்து, அவரிடமிருந்து ₹ 7 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இவர் அரக்கோணம், போளூர் மற்றும் மதுரவாயல் பகுதிகளில் இதேபோன்ற திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்று போலீசார் கண்டுபிடித்தனர். கைதான இந்துமதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications