சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஜா புயலால் சென்னைக்கு பாதிப்பு உண்டா? வானிலை ஆய்வு மைய அதிகாரி விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    கஜா புயல் பற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன்- வீடியோ

    சென்னை: கஜா புயலால், சென்னை வானிலையில் எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான கஜா புயல் இன்று இரவு 11.30 மணிக்கு கடலூர் மற்றும் பாம்பன் நடுவே, நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    Chennai wont get affected due to Gaja cyclone

    சென்னையில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு வங்க கடல் பகுதியில் கஜா நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

    அப்போது அவரிடம் இந்த புயல் காரணமாக சென்னைக்கு ஏதேனும் பாதிப்பு உண்டா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    [கஜா இங்கே வரமாட்டான்.. இன்னிக்கு ஃபுல்லா மழை பெய்யும் என கனவு காணாதீங்க- தமிழ்நாடு வெதர்மேன்]

    அதற்கு பதிலளித்த புவியரசன், கஜா புயலால் சென்னையில் பெரும் தாக்கம் ஏற்படாது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். பரவலாக, மிதமான அளவுக்கு மழை பெய்யும். சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு கிடையாது என்று தெரிவித்தார்.

    English summary
    Chennai wont get affected due to Gaja cyclone, says Chennai meteorological officials said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X