கஜா இங்கே வரமாட்டான்.. இன்னிக்கு ஃபுல்லா மழை பெய்யும் என கனவு காணாதீங்க- தமிழ்நாடு வெதர்மேன்
Recommended Video

சென்னை: கஜா புயல் ரொம்ப தூரத்தில் உள்ளது சென்னையில் இன்று நாள் முழுவதும் மழை பெய்யும் என எதிர்பார்க்காதீர் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை டிசம்பர் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் வங்க கடலில் கஜா புயல் உருவாகியது. இதனால் எந்த பகுதியில் அது கரையை கடக்குமோ என்ற எதிர்பார்ப்பில் தமிழகமே தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் காற்றின் திசை காரணமாக அந்த புயல் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கிறதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சென்னைக்கு வரும் என சொல்லிய போதே மக்களுக்கு வர்தா புயல் கண் முன் நிழலாடியது.
[வலுப்பெறும் கஜா புயல்.. நாசா வெளியிட்ட மாஸ் புகைப்படம்.. எப்படி இருக்குன்னு பாருங்க!]

கரையை கடக்கும்
இதையடுத்து வர்தாவை போல் கஜா இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார். அதன்படி புயலும் சென்னைக்கு அப்பால் சென்றுவிட்டது. எனினும் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

புயலின் தாக்கம்
சென்னையில் அதிகாலை முதல் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் சென்னையில் புயலின் தாக்கம் நிலத்தை நோக்கி நகர்கிறது.

மழை பெய்யும்
புறநகர் பகுதிகளான குறிப்பாக செம்பரம்பாக்கம், ஈசிஆர் மற்றும் தாம்பரம், சிறுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்யும். ஏரி பகுதிகளில் மழை பெய்வதால் சந்தோஷமாக இருங்கள்.

மறக்காதீர்
சூரிய ஒளி மீண்டும் வரும். சென்னையில் இதுபோல்தான் மழை பெய்யும். நாகை பகுதிக்கு புயல் சென்றுவிட்டதை மறந்துவிடாதீர். அதாவது சென்னையிலிருந்து மிக தூரத்தில் உள்ளது கஜா. எனவே சென்னையில் இன்று நாள் முழுவதும் மழை பெய்யும் என கனவு காணாதீர். உள்மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் போது இரவு நேரங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications