சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வலுப்பெறும் கஜா புயல்.. நாசா வெளியிட்ட மாஸ் புகைப்படம்.. எப்படி இருக்குன்னு பாருங்க!

கஜா புயல் குறித்து அமெரிக்க விண்வெளி துறையான நாசா அறிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கஜா புயலால் சென்னையில் மழை, விமான சேவை பாதிப்பு

    சென்னை: கஜா புயல் குறித்து அமெரிக்க விண்வெளி துறையான நாசா அறிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளது.

    கஜா புயல் நேரம் செல்ல செல்ல வலுவடைந்து கொண்டே செல்கிறது. புயல் வலுவடைந்தாலும் இதன் வேகம் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை.

    இந்த புயல் இன்று கரையை கடக்க உள்ளது. கடலூர் பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும். கஜா புயலால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க விண்வெளி துறையான நாசா, என்ஓஓஏ உடன் சேர்ந்து அறிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளது.

    [கஜா புயல் பாதிப்பு.. தமிழகத்தில் முக்கியமான பல ரயில்கள் ரத்து]

    யார் இவர்கள்

    யார் இவர்கள்

    அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வானிலை அமைப்புதான் - என்ஓஓஏ (National Oceanic and Atmospheric Administration) நாசாவின் உதவியுடன் இந்த புகைபடங்களை எடுத்து இருக்கிறது. உலகம் முழுக்க ஏற்படும் வானிலை மாற்றங்கள் குறித்து இந்த அமைப்பு விவரங்களை வெளியிடும். எப்போதும் நாசாவின் உதவியுடன் புகைப்படம் வெளியிடுவதால் இதன் கணிப்பு மிகவும் துல்லியமாக இருக்கும்.

    எப்படி நடக்கிறது

    எப்படி நடக்கிறது

    நாசா வானிலை ஆய்வுக்காக அனுப்பி இருக்கும் 10க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களின் உதவியுடன்தான் இந்த புகைப்படங்கள் வெளியாகிறது. இந்த புகைப்படங்கள் செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்டு வெளியிடப்படும். கஜா புயலை 'சுயோமி என்பிபி'' என்று சாட்டிலைட் புகைப்படங்களாக எடுத்துள்ளது.

    புகைப்படம் வெளியிட்டது

    புகைப்படம் வெளியிட்டது

    கஜா புயல் குறித்து நாசாவும் என்ஓஓஏ அமைப்பு சேர்ந்து புகைப்படம் பல முக்கிய விவரங்களை அளிக்கிறது. சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தூரத்தில் புயல் இருக்கும் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. புயல் எவ்வளவு வலிமையாக உள்ளது என்று புகைபடம் மூலம் தெளிவாக தெரிகிறது.

    எப்படி உள்ளது தெரியுமா

    எப்படி உள்ளது தெரியுமா

    இந்த புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக நாசா தெரிவித்து இருக்கிறது. முதலில் வங்கதேசத்தில் இருந்து 569 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து புயல் முதலில் தென்பட்டது என்றுள்ளது. இது அதிக வேகத்துடன் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    English summary
    Gaja Storm: NASA-NOAA Satellite releases the large Tropical Cyclone's image.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X