விஜய் கேபினட்டில் இடம் பிடிக்க போகும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யார்? கதர்களுக்குள் நடக்கும் போட்டா போட்டி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற உள்ள 2 காங்கிரஸ் அமைச்சர்கள் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மற்றொரு அமைச்சர் பதவிக்காக மேலூர் எம்எல்ஏ விஸ்வநாதன் மற்றும் குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். பெரும்பான்மை பெறவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சி தவெகவுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்தது. மேலும் இனி வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் இணைந்தே சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைமை தெரிவித்தது.

Congress Minister Picks for TVK Cabinet Likely Soon Intense Race for Key Posts

விஜய்யும் கட்சி ஆரம்பித்ததில் இருந்து எங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறி வந்தார். அதன்படியே தற்போது காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளதால் அக்கட்சி எம்.எல்.ஏக்களில் 2 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்போவதாக விஜய் கூறியதாக தகவல் வெளியாகின. மொத்தம் 5 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருந்த நிலையில் 2 பேருக்கு அமைச்சர் பதவி உறுதியாக வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக விஜய்யின் தவெகவும் காங்கிரஸ் தலைமையை தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் அமைச்சர்கள் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக இதில் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும், மற்றொரு அமைச்சர் பதவிக்காக மேலூர் எம்எல்ஏ விஸ்வநாதன் அல்லது குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் ஆகியோரில் யாருக்கேனும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்ட அரசியலில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் இணைந்து, அமைச்சராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி கட்சி மேலிடத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என மாவட்ட பகுதி வழக்கறிஞர் அணி சார்பில் தனியாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மறைந்த முன்னாள் எம்எல்ஏ முரளீதரன் குடும்பத்திற்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் அமைச்சர் பதவி தொடர்பான போட்டி அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+