ஃபிரிட்ஜில் சிக்கன், மட்டன் பிரியாணியை சேமித்து வைத்து சாப்பிடலாமா? எத்தனை நாள் வைக்கலாம்?
சென்னை: பிரியாணி மீந்து போய்விட்டால் அதை எத்தனை நாட்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அது போல் பாதுகாப்பாக பிரிட்ஜில் வைப்பது எப்படி என்பதையும் பார்க்கலாம்.
அந்த காலத்தில் பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவை இல்லாத போது நம் மூதாதையர்கள் சமைத்த உணவு கெட்டு போகாமல் அப்படியே இருந்தது.

இதற்கு காரணம், விறகு அடுப்பில் மண்செட்டியில் சமைத்தது, பூச்சி கொல்லி இல்லாத காய்கறிகள், தானியங்கள் பயிரிடுதல், மசாலாக்களை கைகளால் அம்மி, ஆட்டுக்கல்லில் அரைத்தது போன்றவையே ஆகும்.
ஆனால் இன்று காலம் மாற மாற உடல் உழைப்பும், மெனக்கெடலும் போய்விட்டது. காய்கறி, பழங்களில் பூச்சிக் கொல்லி சேர்க்கப்படுகிறது, தானியங்களிலும் அதே முறையே பயன்படுத்தப்படுகிறது.
மேலும் மசாலாக்களை அரைக்க கிரைண்டர், மிக்ஸி பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு மின்சாதனங்களில் மசாலாக்களை அரைக்கும் போது உணவு பொருள் சூடேறி சுவையை குறைத்துவிடுகிறது.
ஆனால் அம்மிக்கல், ஆட்டுக்கல்லில் குளிர்ந்த தன்மையே இருப்பதால் உணவு கெட்டு போகாமலும் சுவையாகவும் இருக்கிறது. இன்று பிரிட்ஜ் என வந்ததும் காய்கறி, பழங்கள் மட்டுமல்லாமல் மீந்து போகும் சாம்பார், ரசம், பொரியல் உள்ளிட்டவைகளையும் சேர்த்து வைத்து விடுகிறார்கள்.
மறுநாள் அதை சூடுபடுத்தி சாப்பிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் பிரியாணியைும் பிரிட்ஜில் வைத்து சூடு செய்து சாப்பிடுகிறார்கள். இதுகுறித்து விவரங்களை பார்க்கலாம்.
பொதுவாக மருத்துவர்கள் அறிவுறுத்துவது, பிரியாணி உள்ளிட்ட எந்த அசைவ, சைவ உணவுகளையும் பிரிட்ஜில் வைத்து அதை பயன்படுத்தக் கூடாது என்பதுதான். எனினும் வீணாகிறது என்பதற்காக பிரிட்ஜில் வைத்து சாப்பிடுகிறார்கள்.
அந்த வகையில் சமைத்த சிக்கன், மட்டன் பிரியாணியை 4 டிகிரி வெப்பநிலையில் 3 முதல் 4 நாட்கள் வரை வைத்திருக்கலாம். இதே மீன், இறால் பிரியாணியை 1 முதல் 2 நாட்களுக்கு வைத்து சாப்பிடுவது நல்லது என்கிறார்கள்.
ஆனால் வெஜிடபிள் பிரியாணியை 4 முதல் 5 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம் என்கிறார்கள். பிரியாணியில் பயன்படுத்தப்படும் அரிசி, இறைச்சிகளில் பாக்டீரியாக்கள் இருக்கும். அவை 5 டிகிரி முதல் 60 டிகிரி வரை வெப்பநிலையில் வேகமாக வளரும் என்பதால் 4 டிகிரி வெப்பநிலையில் வைத்து பயன்படுத்தலாம்.
ஒரு வேளை பிரிட்ஜில் வைத்த பிரியாணியில் இருந்து துர்நாற்றம் வீசினாலோ, அல்லது புளித்த சுவையில் இருந்தாலோ, பூஞ்சை பூத்திருந்தாலோ அதை கட்டாயம் சாப்பிடவே கூடாது.
பொறுப்பு துறப்பு: இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல் மட்டுமே! இதை பின்பற்றி யாரும் பிரிட்ஜில் வைத்து எந்த உணவையும் சாப்பிடாதீர்கள். கூடுதல் விவரங்களை பெற உங்கள் மருத்துவர் அல்லது உணவு பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டு பலன் பெறலாம்.












Click it and Unblock the Notifications