அதிமுக ‘கவுண்டர்’ பாலிடிக்ஸ்..நீங்க வந்தா மட்டும் போதும்! அண்ணாமலையை அழைத்த ர.ர.க்கள்! பரபர மீட்டிங்
சென்னை: தமிழக அரசியலில் அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது அதிமுக தொடர்பான புதிய தகவல் ஒன்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போது 'We The Leaders' அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலையை அதிமுகவில் இணைக்க சில முக்கிய நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த தகவலுக்கு அதிமுக அல்லது அண்ணாமலை தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
2026 சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டாலும், பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது தமிழக அரசியல் தேர்தல் களம். தேர்தலோடு பரபரப்புகள் அடங்கிவிடும் என எதிர்பார்த்தாலும் தற்போது வரை நாளுக்கு நாள் பெரிய பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

தவெக ஆட்சி அமைந்த பிறகு எதிர் எதிர் துருவங்களாக இருந்த திமுக அதிமுக கூட ஒன்று சேர முயன்றதாக வெளியான தகவல் தமிழக அரசியலையே புரட்டிப் போட்டது என்று தான் சொல்ல வேண்டும். சொல்லப் போனால் அது உண்மைதான் என கூட்டணிகளே குற்றம் சாட்டின.
தமிழக அரசியல்
தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தற்போது அந்த கூட்டணியில் இருந்து விலகி ஆளும் கட்சியான தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மறுபுறம் ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்து வந்த அதிமுக 2026 சட்டசபை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
அதிமுக
தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியில் அதிருப்தி அதிகரித்த நிலையில், முன்னாள் அமைச்சர்களான எஸ் பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கினர். வெளிப்படையாகவே எடப்பாடி பழனிச்சாமி மீது அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் சட்டசபையில் விஜய் அரசுக்கு ஆதரவாக அவர்கள் வாக்களித்தது எடப்பாடி பழனிச்சாமியை நிலைகுலைய செய்தது. அதனை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு பிறகு அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்பதை வெட்டமளிச்சமாக்கும் பொருட்டு அதிமுகவிலிருந்து சில எம்எல்ஏக்கள் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
வைகைச் செல்வன்
மேலும் முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களும் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு தான். நேற்று கூட முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்ததோடு இன்று அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என சொல்கின்றனர். இந்நிலையில் அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை சமாதானப்படுத்த எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில் மேலும் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என சொல்லப்படுகிறது.
எஸ்பி வேலுமணி
அந்த பட்டியலில் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி போன்றவற்ற பெயர்களும் இருக்கின்றன. இந்த நிலையில் தான் அதிமுகவை மீண்டும் பணம் பொருந்தியதாக மாற்றும் வகையில் அண்ணாமலையை அதிமுகவிற்குள் அழைத்து வர சில நிர்வாகிகள் முயன்றதாக சொல்லப்படுகிறது. பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை வீ த லீடர்ஸ் அமைப்பை தொடங்கி ஆட்களை திரட்டி வருகிறார். 50 லட்சம் உறுப்பினர்களுக்கு மேல் சேர்ந்தால் தான் அதனை அரசியல் கட்சியாக மாற்றுவேன் என அண்ணாமலை சொல்லி வரும் நிலையில், தற்போது வரை கிட்டத்தட்ட 20 லட்சம் இளைஞர்கள் அதில் இணைந்து இருக்கின்றனர்.
அண்ணாமலை
மேலும் பாஜக நிர்வாகிகள் பலரும் அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்திருக்கின்றனர். தமிழக முழுவதும் தனக்கான தனிப்பட்ட அரசியல் அடையாளத்தை உருவாக்கும் பணியில் அண்ணாமலை ஈடுபட்டிருக்கும் நிலையில் அண்ணாமலையை ஏன் அதிமுகவுக்கு அழைத்து வரக்கூடாது என சில நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாமலை வந்தால் நிச்சயம் அதிமுகவுக்கு பயன் தரக்கூடியதாக இருக்கும் எனவே அதனை செய்யலாம் என எடப்பாடி பழனிச்சாமிக்கு சில நிர்வாகிகள் சொன்னார்களாம்.
முன்னாள் அமைச்சர்கள்
அவரும் யோசிப்பதாக சொன்னதாக தகவல்கள் உலாவுகின்றன. ஆனால் அதனை யாரும் உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் தான் இது போன்ற பேச்சுக்களை உறுதிப்படுத்தும் வகையில் தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது சென்னையில் நேற்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஆலோசனை நடத்தினார்களாம். அதில் அண்ணாமலையை அதிமுகவுக்கு அழைத்து வருவது, அப்படி அழைத்து வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன மாதிரியான எதிர்மறை விமர்சனங்கள் வரும் என்பது குறித்து விரிவாக ஆலோசித்தார்களாம்.
ரகசிய மீட்டிங்
குறிப்பாக அந்த மீட்டிங்கில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலரும் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் அண்ணாமலையின் ஒப்புதலின் பேரில் இந்த சந்திப்பு நடக்கவில்லை எனவும், அண்ணாமலையின் நலன் விரும்பிகளும் அதிமுகவின் நலன் விரும்பிகள் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றதாகவும் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications