ரேஷனில்.. பொங்கல் பண்டிகையில் தமிழக அரசு தரும் ‘கிப்ட்'.. முதற்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் இலவச வேஷ்டி, சேலை வழங்க வசதியாக முதற்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2026 ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு பொங்கலின்போது தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷனில் பல்வேறு பொருட்கள் வழங்கப்படும்.

pongal-free-dhoti-saree-scheme-tamil-nadu-government-allocates-rs-300-cr-ffor-first-instalment

பொங்கல் பரிசுத்தொகை, பொங்கல் தொகுப்பு, இலவச வேஷ்டி - சேலை உள்ளிட்டவை வழங்கப்படும். இந்நிலையில் தான் வரும் 2027 ம் ஆண்டின் தொடக்கத்தில் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன்கார்டுதாரர்களுக்கு இலவசமாக வேஷ்டி - சேலை வழங்க தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது.

இதுதொடர்பாக தமிழக கைத்தறி, கைவினை பொருட்கள் மற்றும் ஜவுளித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ''026 பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டு நலத்திட்டத்தின் கீழ் ரேஷனில் பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்க முதற்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேஷ்டி, சேலைகள் முதற்கட்டமாக கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சங்கங்களிடம் இருந்து தான் கொள்முதல் செய்யப்படும். தே கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் கூட்டுறவு விசைத்தறி சங்கங்களிடம் இருந்து வாங்கப்படும். வேஷ்டி, சேலை கொள்முதல் செய்யும் பொறுப்பு மற்றும் அதனை தரத்தை கண்காணிக்கும் பணி உள்ளிட்டவை கைத்தறி துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.

கைத்தறி மற்றும் விசைத்தறி சங்கங்களிடம் இருந்து பெறப்படும் வேஷ்டி சேலைகள் தமிழ்நாடு உணவு பொருள் விநியோக கழகத்தின் சேமிப்பு கிடங்களுக்கு தனித்தனியே அமைக்கப்படும். அதன்பிறகு ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு பயோமெட்ரிக் பதிவின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

முதியவர்கள் மற்றும் கைரேகை விழாதவர்கள் என்றால் அவர்களுக்கு கண்விழி பதிவின் மூலமாக வாங்கி கெள்ளலாம். மற்றவர்கள் கைரேகை பதிவின் மூலமாக வாங்கி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இலவச வேஷ்டி - சேலை விநியோகத்தில் குளறுபடியை தவிர்க்க மாநில அரசவிலான கண்காணிப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டி வருவாய் நிர்வாக ஆணையர், உணவு விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குநர் தலைமையில் இந்த கமிட்டி செயல்பட்டுள்ளது. இவர்கள் பொங்கலுக்கு முன்பாக பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி, சேலை கொண்டு செல்வதை உறுதி செய்வார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+