சோபாவில் 5 நிமிடத்தில் பிரிந்த உயிர்.. சாப்பிடலை.. தூங்கவும் இல்லை! பாக்யராஜை இப்படி மாற்றிய பின்னணி
சென்னை: பாக்யராஜ் உயிருடன் இருக்கும்போது அவரைத் தலைவர் பதவியிலிருந்து இறக்குவதற்கு நிறைய சதி வேலைகளைச் செய்து, அவருக்குப் பெரும் மன உளைச்சலை கொடுத்தவர்கள், அவர் மறைந்த பிறகு "சங்கத்தின் நிரந்தரத் தலைவர் பாக்யராஜ் தான்" என்று நாடகமாடுகிறார்கள். யாரும் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு ஸ்டண்ட் அடிக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் வெங்கடேசன் குற்றஞ்சாட்டுகிறார்.
Media circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள திண்டுக்கல் வெங்கடேசன், "கதையைத் திருடும் பெரிய டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக நின்று, பாதிக்கப்பட்ட சாதாரண உதவி இயக்குநர்கள், கதை ஆசிரியர்களின் பக்கம் பாக்யராஜ் எப்போதும் துணை நின்றார்.

பலருக்கு பஞ்சாயத்து செய்து நஷ்டஈடு தொகையையும் வாங்கித் தந்துள்ளார். அதனால்தான் எளிய கலைஞர்கள் மத்தியில் அவருக்குப் பெரிய மதிப்பு இருந்தது.
ரூ.25 கோடி சொத்து மதிப்பு
ஆனால் பெரிய ஆட்களுக்கு எதிராக அவர் நின்றதே அவருக்குப் பல எதிர்ப்புகளையும் சங்கத்திற்குள் குடைச்சல்களையும் உருவாக்க தொடங்கியது. பெரிய ஆட்களுக்கு சாதகமாக இருந்திருந்தால் அவர் நிறைய சம்பாதித்திருக்கலாம், ஆனால் பாக்யராஜ் அப்படி செய்யவில்லை.
சினிமாவில் இவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தும் பாக்யராஜிடம் தற்போது சொந்த வீடு ஒன்று மட்டும்தான் இருக்கிறது. சினிமாவில் சம்பாதித்த பணத்தை அவர் சினிமாவிலேயே விட்டுவிட்டார். மிஞ்சிப் போனால் பாக்யராஜின் மொத்த சொத்து மதிப்பே 25 கோடி ரூபாய்க்குள்ளாகத்தான் இருக்கும்"
எளிய கலைஞர்களுக்காக உழைத்த பாக்யராஜை, தலைவர் பதவியிலிருந்து எப்படியாவது இறக்க வேண்டும் என்று சங்கத்தில் இருந்த ஒரு குறிப்பிட்ட குழுவினர் திட்டமிட்டு வேலை செய்து வந்தனர். நமக்கு எதிராக ஒரு மிகப்பெரிய சதி வேலை நடக்கிறது என்பதை அறிந்த பாக்யராஜ், இதனால் பெரும் அதிர்ச்சியடைந்து மன ரீதியாக உடைந்து போனார்.
இரவு சாப்பிடவில்லை - நெஞ்சுவலி
தவறு செய்யாத நேர்மையான மனிதர்களுக்குப் பிரச்சனை வரும்போது அவர்கள் மனதை அது பெரிதும் உலுக்கும். அதுபோலதான் பாக்யராஜும் இந்த விவகாரத்தால் மன உளைச்சலுக்கு ஆளானார். இறப்பதற்கு முன்தினம் இரவு முழுவதும் தூங்கவில்லை, சாப்பாடும் சாப்பிடவில்லை..
"நாளை காலை 11 மணிக்கு மேல் ஒரு முடிவு எடுப்போம், தேர்தல் இல்லாமல் நம்மை நிற்க வைத்தால் தலைவராக நீடிப்போம், இல்லாவிட்டால் பதவியிலிருந்து இறங்கிவிடுவோம்" என்று பேசிக் கொண்டிருந்தாராம்.
பாக்யராஜ் உயிருடன் இருக்கும்போது அவரைத் தலைவர் பதவியிலிருந்து இறக்கப் பல சதி வேலைகளைச் செய்து, அவருக்குப் பெரும் மன உழைச்சலைக் கொடுத்தவர்கள், அவர் மறைந்த பிறகு "சங்கத்தின் நிரந்தரத் தலைவர் பாக்யராஜ் தான்" என்று நாடகமாடுகிறார்கள். யாரும் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு ஸ்டண்ட் அடிக்கிறார்கள்.
5 நிமிஷத்தில் பிரிந்த உயிர்
எந்த தப்பும் செய்யாமல், லஞ்சம் வாங்காமல் நேர்மையாக உழைத்த தனக்கு எதிராக சதி நடப்பதை பாக்யராஜால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மறுநாள் காலை சோபாவில் வந்து உட்கார்ந்த 5 நிமிஷத்திற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துவிட்டது. "என்ன நடந்தது என்றே தெரியவில்லை, கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது" என்று அவரது மனைவி பூர்ணிமா கலங்கி சொல்கிறார். சில மனிதர்களின் சுயநல செயல்பாடுகளே ஒரு நல்ல மனிதனின் உயிரைப் பறித்து விட்டது" என்று கவலையை பகிர்ந்து கொண்டுள்ளார் பத்திரிகையாளர் வெங்கடேசன்..
எழுத்தாளர் சங்கத்தில் நிலவும் பிரச்சனைகளை குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் இல்லாதவர். வீட்டிற்குத் தெரியாமல் எல்லாவற்றையும் தனக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டிருந்தார். சங்கப் பிரச்சனையே அவரை சாப்பிட விடாமலும், தூங்க விடாமலும் சிந்திக்க வைத்துள்ளது.. கடைசியில் மாரடைப்பில் கொண்டு போய் முடித்திருக்கிறது. பாக்யராஜின் மரணத்திற்கு மொத்த காரணம், எழுத்தாளர் சங்கத்தில் கொடுக்கப்பட்ட குடைச்சல்களும், அங்கு நடக்கவிருந்த தேர்தலும் தான்' என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications