மூக்கு முட்ட குடித்த பெண்.. காதலன் ரூமில் என்னாச்சு? பாத்ரூமில் வாந்தி எடுக்க போனாரா? சென்னை கொடுமை
சென்னை: சில இளம்பெண்களும், மாணவிகளும் மது அருந்துவது சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது.. அதிலும் அரசுப் பள்ளி சீருடையில் மாணவிகள் சிலர் அரசு பஸ்ஸிலேயே மது அருந்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வுகளும் உண்டு.. இந்நிலையில், இளம்பெண் ஒருவர் மது அருந்தி, தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை தந்து வருகிறது.
3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், செங்கல்பட்டு மாவட்டம் படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 2ம் வருடம் படித்து வந்தார்.. இதற்காக ஏகாட்டூரில் ஹாஸ்டலில் தங்கியிருந்தார்.

வீக் எண்ட் தோழியுடன் விருந்து
வாரக்கடைசி சனி, ஞாயிறு காலேஜ் விடுமுறை என்பதால், "வீக் எண்ட்" விடுமுறையை தோழியுடன் கொண்டாட நினைத்துள்ளார்.. இதற்காக ஏகாடூரில் தோழியின் அபார்ட்மெண்டுக்கு சென்ற இளம்பெண், தோழிகள் சிலருடன் சேர்ந்து மது குடித்ததாக தெரிகிறது.
இரவு முழுவதும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்த நிலையில் காலையில் அப்பெண்ணுக்கு தொடர்ச்சியான வாந்தி வந்துள்ளது.. பிறகு மயக்கமும் சேர்ந்து வந்துள்ளது.. பிறகு தனக்கு பார்வை மங்கலாக தெரிகிறது என்று நண்பர்களிடம் சொன்னாராம்.. அதற்கு பிறகுதான், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.. ஆனால், பரிதாபமாக அப்பெண் இறந்துவிட்டார்.
சென்னையில் மது குடித்த காதலி
இந்த சம்பவம் அப்போது மிகப்பெரிய அதிர்வலையை சென்னையில் ஏற்படுத்தியிருந்தது.. இந்நிலையில், மீண்டும் சென்னையில் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது..
ராயப்பேட்டையை சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கு 26 வயதாகிறது.. நந்தனத்தில் உள்ள தனியார் ஆடிட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மதுரவாயல், பகுதியில் வசித்து வரும் கணேஷ்ராம் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார்.. பிறகு இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
காதலன் அறையில் காதலி
சேலத்தை சேர்ந்த கணேஷ்ராம் என்ஜினியரிங் படித்துள்ளார்.. எனினும் சினிமாவில் டைரக்டர் ஆக வேண்டும் என்பதே கனவாக இருந்துள்ளது.. எனவே அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்..
இந்நிலையில், நேற்று மாலை, கணேஷ்ராம் தங்கியிருந்த ரூமுக்கு காதலி வந்துள்ளார்.. அப்போது 2 பேரும் சேர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. பிறகு இருவரும் சேர்ந்து கோழிக்கறியை சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள்.. அப்போது, சிறிது நேரத்திலேயே அப்பெண்ணுக்கு வாந்தி வந்துள்ளது..
கழிவறையில் தடுமாறி விழுந்து
இதனால் கழிவறைக்கு சென்றபோது, அங்கே தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.. இதில் நெற்றியில் பலத்த காயம் அடைந்து, ரத்த வெள்ளத்திலேயே இளம்பெண் இறந்துவிட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணேஷ்ராம், உடனே பெண்ணின் பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் தந்தார்..
போஸ்ட் மார்ட்டம்
விரைந்து வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணையை மேற்கொண்டுள்ளனர்..
உண்மையிலேயே இளம்பெண் எப்படி இறந்தார்? என்பது குறித்து, காதலனிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. எனினும், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், இளம்பெண்ணின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்கிறார்கள் போலீசார்.












Click it and Unblock the Notifications