திடீரென வீட்டுக்கு வந்த கொழுந்தன்.. அண்ணி அறையில் கேட்ட அந்த சப்தம்.. அடுத்து நடந்த கொலை
சென்னை: சென்னையில் அண்ணியுடன் உடலுறவில் இருந்ததை பார்த்த கொழுந்தன் கடுமையாக தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
வீட்டில் அவரது கணவர் இல்லாத மணிகண்டன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல அந்த பெண்ணின் வீட்டிற்கு மணிகண்டன் சென்றுள்ளார்.

உல்லாசம்
அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவரின் தம்பி வேலு என்பவர் வீட்டிற்கு திடீரென வந்துள்ளார். அப்போது ஒரு அறையிலிருந்து முனகல் சப்தம் வந்ததை பாலு கேட்டார். உடனே அந்த அறைக்கு போய் பார்த்த போது தனது அண்ணியுடன் கூலித் தொழிலாளி உல்லாசமாக இருந்தை கண்டார்.

ஆத்திரம்
உடனே ஆத்திரமடைந்த வேலு, என் அண்ணன் இல்லாத போது என்ன வேலை செய்கிறாய் என கேட்டு மணிகண்டனை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கொழுந்தன் கைது
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மணிகண்டனின் மனைவி லதா அளித்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை போலீஸார் பாலுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். மணிகண்டனுக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள். மேலும் வேலுவின் அண்ணன் அவரது மனைவியிடம் தகராறு செய்து வருகிறார்கள். "உன்னால்தான் அவர் ஜெயிலில் இருக்கிறார்" என உறவினர்கள் அந்த பெண்ணை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதல்
எங்கு பார்த்தாலும் கள்ளக்காதல் மலிந்து வருகிறது. அக்காள் கணவர்- கொழுந்தியாள், அண்ணி- கொழுந்தன், மாமியார்- மருமகன், மாமனார்- மருமகள் என உறவுகளுக்குள்ளே கள்ளக்காதல்கள் சில இடங்களில் முளைத்து வருகின்றன. அது போல் வெளியிடங்களிலும் ஆண்- பெண் கள்ளக்காதல் ஏற்படுகிறது. இதனால் இறுதியில் நடப்பது கொலையும், அந்த கள்ளகாதலர்களின் குடும்பம் நிர்கதியாய் நிற்பதும், குழந்தைகள் ஆதரவற்று தவிப்பதும்தான். இந்த பிரச்சினைகளால் குடும்பத்தில் தகராறு ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதுகுறித்து உளவியல் மருத்துவர்கள் கூறுகையில், இது போன்று கள்ளக்காதலில் ஈடுபடுபவர்களை பார்த்ததும் அடிப்பதும் கொலை செய்வதும் என இருக்காமல் அவர்களுக்கு கவுன்சலிங் கொடுத்து ஏற்கெனவே உள்ள மணவாழ்க்கையில் ஈடுபட வைக்க வேண்டும். அதன் பிறகு சேர்ந்து வாழ்வதும் சட்டரீதியில் பிரிந்து விரும்புவோரை திருமணம் செய்து கொண்டு வாழ்வதும் அவர்களுடைய முடிவாகும். ஆத்திரத்தில் எடுக்கும் முடிவுகள் என்றுமே சரியாக இருந்ததில்லை என தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications