ஆதம்பாக்கம் சஞ்சீவியை ஃபாலோ செய்த சைதாப்பேட்டை பிரகாஷ்.. கேமரா வைத்தது எப்படி? பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: சென்னை தனியார் மருத்துவமனை கழிவறையில் கேமரா வைத்த பிரகாஷ் ஆதம்பாக்கம் சஞ்சீவி ஸ்டைலை அப்படியே பாலோ செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
சென்னை சைதாப்பேட்டையில் சிறுநீரக கல்லை நீக்கும் மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு நேற்று மாலை பெண் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார்.
அப்போது கழிவறையில் ரகசிய கேமரா ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அந்த பெண்ணுக்கு எழுந்தது. இதையடுத்து ரகசிய கேமரா கண்டறியும் ஆப் மூலம் அந்த அறையை சோதனை செய்துள்ளார்.

வாக்குமூலம்
அப்போது கேமரா இருந்ததை அடுத்து போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணையில் மருத்துவமனை ஊழியர் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பிரகாஷ் வாக்குமூலம் அளித்தார்.

ரசிப்பேன்
அவர் கூறுகையில் பெண்கள், நர்ஸ்கள் உடைமாற்றும் அறையில் என்னுடைய செல்போனை ஆள் இல்லாத நேரத்தில் வைத்துவிடுவேன். எனக்கு எப்போதும் இரவுப் பணி என்பதால் செல்போனை நள்ளிரவில் வைத்து விட்டு காலையில் அதை எடுத்து அவர்கள் உடைமாற்றிய காட்சிகள் உள்ளிட்டவை பதிவாகியுள்ளதை பார்த்து ரசிப்பேன் என்று கூறியுள்ளார்.

திட்டம்
இவர் கூறியதை வைத்து பார்க்கும் போது இதுவரை ஏராளமான பெண்களை வீடியோ எடுத்து வைத்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இதனால் அவரிடம் விசாரணை நடத்தினால் உண்மைகள் தெரிய வரும் என்றும் போலீஸார் திட்டமிட்டுள்ளார்.

சஞ்சீவி
பிரகாஷின் வாக்குமூலத்தை வைத்து பார்க்கும் சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் இயங்கி வந்த ஹைடெக் பெண்கள் தனியார் விடுதியில் படுக்கை அறை, குளியலறை ஆகிய இடங்களில் கேமராக்களை வைத்திருந்த திருச்சியைச் சேர்ந்த உரிமையாளர் சஞ்சீவிதான் நினைவுக்கு வருகிறார்.

விடிய விடிய பார்த்த சஞ்சீவி
இவரிடம் நடத்திய விசாரணையில் பெண்கள் அனைவரும் விடுதியை விட்டு சென்றவுடன் கேமராவில் பதிவாகும் காட்சிகளை சிறிது நேரம் பார்வையிட்டு விட்டு அதை பென்டிரைவில் காப்பி செய்து கொண்டு விடிய விடிய பார்ப்பேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications