விடிய விடிய அலறிய இளைஞர்.. 10 மணி நேரம் ஒரே பரபரப்பு.. அதுவும் "கூவத்தில்".. அதிர்ச்சியில் உறைந்த சென்னை
சென்னை கூவத்தில் விழுந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டார்
சென்னை: செல்பி எடுக்க ஆசைப்பட்டு, கூவத்தில் விழுந்துவிட்டார் ஒரு இளைஞர்.. இதையடுத்து 10 மணி நேரம் கழித்து, அவரை, படாதபாடு பட்டு சென்னை போலீசார் மீட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இளைஞர்களுக்கு செல்பி மோகம் பெருகி கொண்டிருக்கிறது.. ஒரு இடத்தை பார்த்துவிட்டால் போதும், அங்கே நின்று செல்பி எடுத்து, அதை சோஷியல் மீடியாவில் போஸ்ட் போட்ட பிறகுதான் அடுத்த வேலையே ஆரம்பிக்கிறார்கள்.. இயல்புக்கும் திரும்புகிறார்கள்..
ஆனாலும் பல சமயங்களில் செல்பி எடுப்பது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி விடுகிறது... எத்தனையோ பேர் அநியாயமாக உயிரிழந்த சம்பவங்களும் நடந்து கொண்டுதான் உள்ளது. அப்படித்தான் ஒருவர் கூவம் பிரிட்ஜில் செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளார்..

நேப்பியர் பாலம்
நேற்று ராத்திரி 10 மணி இருக்கும்.. சென்னை நேப்பியர் பாலத்தில் இளைஞர் ஒருவர் நின்றுகொண்டு, செல்பி எடுத்துள்ளார்.. அப்போது எதிர்பாராத விதமாக தடுமாறி, திடீரென பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் விழுந்து விட்டார்... கூவம் ஆற்றில் எந்நேரமும் நீர் நிறைந்துதான் இருக்கும்.. அந்த கூவத்தில் விழுந்துவிட்ட நிலையில், அவரால் நீந்தி மேலே வர முடியவில்லை.. அதனால் தத்தளித்து கொண்டே "காப்பாத்துங்க.. காப்பாத்துங்க" என்று கத்தி உள்ளார்..

அலறல்
நேரம் ஆக ஆக மக்கள் நடமாட்டமும் அங்கு குறைந்தது.. பஸ், பைக்குகளில் செல்பவர்களுக்கும் இவர் சத்தம் போட்டது காதில் விழவில்லை.. அந்த பக்கம் சென்றவர்களும் அவரை கவனிக்கவில்லை... விடிய விடிய கத்தி கொண்டே இருந்திருக்கிறார் இளைஞர்.. இந்த நிலையில் இன்னைக்கு காலையில் 6 மணிக்கு அவர் போட்ட சத்தம் அங்கிருந்த சிலருக்கு கேட்டுள்ளது..

மீட்பு
அதற்கு பிறகுதான் அவர்கள் கூவத்தில் எட்டிப்பார்த்து, ஒருவர் தத்தளித்து கிடப்பதை அறிந்து, ஒரு கயிறு எடுத்து வந்து அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர்.. ஆனால், அது தோல்வியில் முடிந்ததால், உடனடியாக போலீசுக்கு தகவல் சொல்லி உள்ளனர்.. போலீசாரும் மீட்பு படையினருடன் விரைந்து வந்து, கூவத்தில் இறங்கி அந்த இளைஞரை பத்திரமாக மீட்டனர்.

சிகிச்சை
ராத்திரி 10 மணிக்கு உதவிக்கு கத்த ஆரம்பித்தவர்.. இன்னைக்கு காலை வரை சத்தம் போட்டுக் கொண்டே இருந்துள்ளார்.. உயிரை கையில் பிடித்து கொண்டு இரவெல்லாம் இருந்துள்ளார்.. மிகவும் பயந்து போய் காணப்பட்டார் இளைஞர்.. அதனால், அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.. அங்கு அவருக்கு டெஸ்ட்கள் எடுக்கப்பட்டு சிகிச்சையும் நடந்து வருகிறது..
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications