சென்னையில் இன்று காலை 9 மணி முதல் 2 வரை மின்தடை.. எந்தெந்த ஏரியாக்கள் தெரியுமா? லிஸ்ட்ட பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர், வியாசர்பாடி, கேகே நகர், கிண்டி, பல்லாவரம், ஆவடி, மதுரவாயல், சிறுசேரி, ஐடிசி, அடையார், போரூர் உள்பட பல இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

சென்னையில் பராமரிப்பு பணியின் காரணமாக இன்று மின்சாரம் தடைப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

power cut chennai eb tangedco

சென்னையில் 09.07.2024 (அதாவது இன்று) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், வியாசர்பாடி, கேகே நகர், கிண்டி, பல்லாவரம், ஆவடி, மதுரவாயல், சிறுசேரி, ஐடிசி, அடையாளர், கொட்டிவாக்கம், போரூர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

அம்பத்தூர்: கள்ளிக்குப்பம், கங்கை நகர், முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், சர்வீஸ் ரோடு, ரெட்ஹில்ஸ் ரோடு, ராமாபுரம், பஜார், வரதராஜபுரம், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பஜார் ரோடு, பட்டரவாக்கம் ரோடு, சம்தாரியா நகர், ஓவி அழகேசன் நகர், கொரட்டூர், ஆர்எஸ் ரோடு, ரெட்டி தெரு, பாரதி நகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, திருமுல்லைவாயல் ரோடு, மாணிக்கம் பிள்ளை தெரு, மேணாம்பேடு ரோடு, எச்டிஎச் ரோடு, பாடி, பம்பிங் ஸ்டேஷன், கொரட்டூர் பேருந்து நிலையம், கொரட்டூர் ரயில்வே ஸ்டேஷன், வெங்கடராமன் நகர், லட்சுமண முதலி தெரு, துரைசாமி ரெட்டி தெரு, வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதி 61வது தெரு முதல் 72வது தெரு வரை, வடக்கு அவென்யு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

வியாசர்பாடி: கொடுங்கையூர், ஆண்டாள் நகர், அன்னை தெரசா, ஐஸ்வர்யா நகர், அபிராமி அவென்யு, மணலி சாலை, லட்சுமி அம்மன் நகர் 1 முதல் 3வது தெரு, தென்றல் நகர் 1 முதல் 8 வது தெரு, வேதாந்த முருகப்பன் தெரு, அன்னைஅவென்யு 1 முதல் 3வது தெரு, எஸ்ஆர் நகர், விஜயலட்சுமி நகர், பத்ரகிரி நகர், ராகவேந்திரா நகர், கணேஷ் நகர், சுகந்தம்மாள் நகர், பாலாஜி நகர் மற்றும் சக்தி நகர், கேஎம்ஏ கார்டனின் ஒரு பகுதி, டிஎச் சாலை, கேகேடி நகர் பிளாக் 1 முதல் 6 வரை, சிட்கோ நகர், இண்டஸ்ரியல் எஸ்டேட், ஏகேஎம் நகர், தாமோதரன் நகர், கோல்டன் காம்ப்ளக்ஸ், ஜேஜேஆர் நகர், எஸ்எம் நகர் பிளாக் 25 முதல் 88 வரை, சாம்நத்தூர் காலனி, மல்லிகைப்பூர் காலனி, ஆர்ஆர் நகர், கேஏ 4வது தெரு, வியாசர்பாடி புதுநகர், மேற்கு தொகுதி, மேற்க குறுக்கு, மத்திய குறுக்கு 1 முதல் 9 வது தெரு, சென்ட்ரல் அவென்யு மற்றும் மேற்கு அவென்யு சாலை, சிஎம்டபிள்யூஎஸ்எஸ்பி பம்பிங் ஸ்டேஷன், மத்திய குறுக்கு தெரு, 10 முதல் 19 வது தெரு, 4வது பிரதான சாலை, 7 வது பிரதான சாலை 8 வது பிரதான சாலை, வடக்கு அவென்யு சாலை, பாரியர் குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கேகே நகர் - கிண்டி: வளசரவாக்கம் பிரிவு, சுரேஷ் நகர், பிள்ளையார் கோவில் தெரு, விஓசி நகர், காசி எஸ்டேட், பிஎல்என் பிரசாத் நகர், கைக்கான்குப்பம், அண்ணாஜிராவ் நகர் ஆகிய இடங்களிலும், கிண்டியை பொறுத்தமட்டில் சுரேந்தர் நகர், கேசரி நகர் பகுதி, வித்யா நகர், முத்தையால் ரெட்டி நகர், பாரதிதாசன் தெரு, பாலாஜி நகர், உள்ளகரம் உஷா நகர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

ஆவடி: திருமுல்லைவாயல், வெள்ளனூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடபாளையம், சிவா தோட்டம், செல்லி அம்மன் நகர், லட்சுமி நகர், ஆர்கேஜே வள்ளி வேல் நகர், தாய் நகர், அலமாதி, எடப்பாளையம், பழைய அலமாதி, உப்பரபாளையம், ஸ்ரீராம் நகர், பாலாஜி கார்டன், சன் சிட்டி, சிடிஎச், சிடிஎச் சாலை, காந்தி நகர், கவரப்பாளையம், சிந்தது நகர் டிஆர்ஆர் நகர், பெரியார் தெரு, சோழவரம், செம்புலிவரம், கொட்டிமேடு, சோழவரம் பெரிய காலனி, சோழவரம் ஜிஎன்டி சாலை, சிறுனியம், சோத்துப்பெரும்பேடு, பார்த்த சாரதி நகர், விஜயநல்லூர், சங்கலம்மன் அனேக்ஸ், நல்லூர் டோல்கேட், கோவில் பாதாகை, பாண்டேஸ்வரம், கலைஞர் நகர், கோவில் பாதகை பிரதான சாலை, பூம்பொழில் நகர், மசூதி தெரு, புழல், விச்சூர், வெள்ளி வாயல், அம்மந்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மின் சேவை தடைப்பட உள்ளது.

பல்லாவரம் - மதுரவாயல் - சிறுசேரி: பல்லாவரத்தை பொறுத்தமட்டில் ஜெயின், கிழக்கு மெயின் ரோடு, சங்கர் நகர் மெயின் ரோடு, காந்தி நகர் மெயின் ரோடு, சங்கர் நகர் 7 வது தெரு முதல் 19 வது தெரு வரை பிள்ளையார் கோவில் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, எல்ஐசி காலனி 4வது தெரு, மதுரவாயல் ஏரியாவை எடுத்து கொண்டால் ஆலப்பாக்கம், தனலட்சுமி நகர், நோதாஜி நகர் 1முதல் 4வது தெரு, ஆலப்பாக்கம் மெயின் ரோடு, சீனிவாசா நகர் 1வது தெரு 2வது தெரு, கோவிந்தப்ப நாயக்கர் 1 தல் 3வது தெரு வரை, சுந்தர் நகர் 1 முதல் 7 வது தெரு வரை, நடேசன் நகர், அஷ்டலட்சுமி நகர் 23வது தெரு, சிறுசேரியை பொறுத்தவரை ஐடிசி, சிறுசேரி சிப்காட் பகுதிகளில் இன்று ‛பவர்கட்' ஏற்பட உள்ளது.

அடையார்: கொட்டிவாக்கம், ஜெர்னலிஸ்ட் காலனி, ஸ்ரீநிவாசபுரம், புதிய கடற்கரை சாலை, காவேரி நகர் 1 முதல் 6வது தெரு, கற்பகாம்பாள் நகர், லட்சுமன பெருமாள் நகர், திருவள்ளூர் நகர் 1 முதல் 59வது தெரு வரை, பகவதி சிங் சாலை, வெங்கடேஷ்வரா நகர் 1 முதல் 21வது தெரு வரை, புதிய காலனி 1 முதல் 4வது தெரு வரை, கொட்டிவாக்கம் குப்பம், பஜனை கோவில் தெரு, இசிஆர் மெயின் ரோடு, மருந்தீஸ்வர் கோவில் முதல் கசுரா கார்டன், பல்கலை நகர், தெற்கு மாட தெரு, வடக்கு மாட தெரு, கிழக்கு மாட தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ராஜா ரங்கசாமி அவென்யு 1 முதல் 4வது கடல் வார்டு ரோடு, பாலகிருஜ்ண ஹைரோடு, வால்மிகி நகர், கலச்சேத்ரா ரோடு, சிஜிஐ காலனி, காவலர் குடியிருப்பு, திருவீதியம்மன் கோவில் தெரு, சங்கம் கலானி, காமரான் சாலை, கந்தசாமி நகர், பாலவாக்கம் பகுதி 3வது ரோடு, 4வது மெயின் ரோடு, காமராஜ் நகர், பிடிசி டெப்போ, திருவள்ளூவர் சாலை 5வது கிழக்கு தெரு முதல் 24 வது கிழக்கு தெரு வரை, காமராஜ் நகர், சவுத் அவென்யு, மங்கலகிரி உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.

திருமுடிவாக்கம்: திருநீர்மலை மெயின் ரோடு, மைக்ரோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், வழுதலம்பேடு, ஸ்ரீகிருஷ்ணா நகர், பெருமாள் நகர், பாலம் ரிவேரா, காசா கிராண்ட், தோஷி, நேவிஸ் மற்றும் ஹேர்டேஜ் குடியிருப்புகள், மகளிர் தொழில்பேட்டை, எம்கேபி நகர், அருள் முருகன் நகர், கலைமகள் நகர், கற்பகம் நகர், சாயிபாபா நகர், குமரன் நகர், சன் சிட்டி, டெம்பிள் வேவ், அமர்பிரகாஷ் அபார்ட்மென்ட் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+