சென்னையில் பிரபல ரௌடி சிடி மணி திடீர் கைது.. கோர்ட் பக்கம் வந்தவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்!
சென்னை: சென்னையில் பிரபல ரௌடி சிடி மணி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த ரௌடி சிடி மணியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
சென்னையின் பிரபல ரவுடி சிடி மணி என்கிற மணிகண்டன். தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இவர் மீது ஆயுதங்கள் பதுக்கல், தொழில் அதிபர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்தல், போலீசாரை துப்பாக்கியால் சுட்டது என பல வழக்குகள் உள்ளன. தமிழ்நாடு அளவில் பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்த திண்டுக்கல் பாண்டியின் சிஷ்யனாக இருந்த சிடி மணி, அவரது மரணத்துக்கு பிறகு மிகப்பெரிய ரவுடியாக உருவெடுத்தார்.

சிடி மணி மீது அடையாறு, சைதாப்பேட்டை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரௌடி சிடி மணி கடந்த 2007, 2009, 2012, 2015 ஆகிய ஆண்டுகளில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தார். பின்னர் 2018ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த சிடி மணி தலைமறைவாக இருந்த நிலையில், 2021ல் மீண்டும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டும், ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார் சிடி மணி. தலைமறைவாக இருந்த சிடி மணி, வாரண்ட் ரீ-கால் செய்ய தனது வழக்கறிஞருடன் அல்லிக்குளம் நீதிமன்றம் வந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கிலும் சிடி மணிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அவரிடம் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் சிடி மணி. சிடி மணி கைது சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications