சென்னையில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியாக்கள் தெரியுமா? நோட் பண்ணுங்க மக்களே
சென்னை: சென்னையில் ஆவடி, மயிலாப்பூர், சோழவரம் உள்ளிட்ட ஏரியாக்களில் நாளை (மே 23)ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மாதாந்திர பாராமரிப்பு பணிகளுக்காக ஏதேனும் ஒரு நாள் மின்சாரம் தடை செய்யப்படும். அன்றைய தினம் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு மக்களுக்கு பிரச்சனையின்றி மின்சப்ளை என்பது வழங்கப்படும்.

அந்த வகையில் சென்னையில் நாளை (மே 23) சில இடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மின்சாரம் தடைப்படும் இடங்களின் விபரம் வருமாறு:
சென்னையில் நாளை (மே 23)ம் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக சோழவரம், ஆவடி மற்றும் மயிலாப்பூரில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது. மதியம் 2 மணிக்கு பிறகு மின்சப்ளை மீண்டும் சீராக வழங்கப்படும்.
ஏரியா வாரியாக பார்த்தால் சோழவரத்தை எடுத்து கொண்டால் சோத்துபெரும்பேட்டின் ஒருபகுதி, காரனோடை, ஒரக்காடு ரோடு, கோட்டைமேடு பெரிய காலனி, செம்புலிவரம் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. அதேபோல் மியலாப்பூரை எடுத்து கொண்டால் சாந்தோம் ஹைரோடு, டோமிங் குப்பம், டோமிங் லைன், முல்லையம்மா நகர், சீனிவாசபுரம், கிழக்கு சர்க்கிள் ரோடு, மதாக்ஸ் சர்ச் ரோடு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
அதேபோல் லாசர் சர்ச், ரோசரி சர்ச் ரோடு, முத்து தெரு, அப்பு தெரு, சையத் வாஹன் உசேன் தெரு, எம்எம்கே தெரு, கச்சேரி ரோடு, நொச்சிக்குப்பம், பாபநாசம் சாலை, பஜார் ரோடு கன்னிலா தெரு, தேவதி தெரு, நடுதெரு,சாலை தெரு, சித்ரகுளம் வடக்கு, தச்சு அருணாச்சலம் தெரு, ஆபிரகாம் தெரு, விசி கார்டன், ஆர்கே முத்து ரோடு, சோலையப்பம்ன் தெரு, மந்தவெளி 5வது கிராஸ் ரேடு, வடக்கு மற்றும் கிழக்கு மாதா தெரு, நல்லப்பன் தெரு, ஆதம் தெரு, குமரகுரு தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
ஆவடி ஏரியாவை எடுத்து கொண்டால் மைதானமல்லி பாடசாலை தெரு, அம்பேத்கர் தெரு, எம்சி ராஜா தெரு, வள்ளூவர் தெரு, ராஜீவ் காந்தி நகர் 1வது முதல் 8 வது தெரு, பிருந்தாவன்நகர் 1வது முதல் 5வது தெரு, ஐஜிபி, சிஆர்பிஎப், காரிசன் இன்ஜினியரிங் ஐஏஎஃப் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சப்ளை என்பது இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications