Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘உங்க மடில படுக்கிறேன்’ – பெருங்குடி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறித்த இளைஞரின் ஆபாச பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களுக்கு பொது இடத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரோசி. இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று பணி முடிந்து வீடு திரும்பவதற்காக பெருங்குடி ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சௌந்தர் என்கிற இளைஞர் ரோசியிடம், உங்கள் மடியில் படுத்துக்கிறேன். என்னுடன் வந்துவிடுங்கள் என ஆபாசமாக பேசியதுடன், அவரின் தங்க செயினை பறித்து சென்றான். பட்டபகலில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை சௌந்தரை கைது செய்த நிலையில், சம்பவம் குறித்து ரோசி விவரித்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரோசி செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் பெருங்குடி ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தேன். அவன் என் அருகில் வந்து அமர்ந்து 'நான் பி.ஏ படித்துள்ளேன். சரியான வேலை கிடைக்கவில்லை. ஸ்ட்ரெஸ்ஸாக உள்ளது' என்று பேச்சு கொடுத்தான். நான் பதில் சொல்லாமல் வேறு இடம் சென்றேன். அங்கேயும் வந்து, 'உங்களைப் பார்த்தால் டீச்சர் போல உள்ளது. பெயர் என்ன' என்று கேட்டேன். 'அதைத் தெரிந்து நீ என்ன செய்ய போகிறாய். போடா' என்று கூறினேன்.

Chennai Perungudi Chain

தவறாக நடந்து கொள்ள முயற்சி

என் கை பிரேஸ்லைட்டில் என் பெயர் இருந்ததை பார்த்து உங்கள் பெயர் ரோசியா என கேட்டான். பிறகு தவறாக பேசி நடந்து கொள்ள பார்த்தான். 'நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள். என்னுடன் வந்துவிடுங்கள்' என்று கூறினான். நான், 'இங்கிருந்து எழுந்து போ. இல்லாவிடின் போலீஸை கூப்பிடுவேன்.' என்று கூறினேன். அதற்கு அவன்,' நான் உங்கள் மடியில் படுத்துக் கொள்கிறேன்.' என்று அருகில் வந்தான்.

மீண்டும் அருகில் வந்தவன்

உடனடியாக நான் எழுந்து வேறு பென்சில் அமர்ந்துவிட்டான். அவனும் எழுந்து சென்றவன் பிறகு மீண்டும் என் அருகில் வந்து அமர்ந்தான். இங்கிருந்து எழுந்து செல்லாவிடின் காவல்துறையிடம் சொல்வேன் என்று கூறிக் கொண்டிருக்கும்போதே, கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க தாலி செயினை பிடித்து இழுத்து ஓடிவிட்டான். என்னால் ஓட முடியவில்லை.

செயின் பறிப்பு

நல்ல வேளையாக பாதி செயினை கையில் பிடித்து இழுத்ததால் வந்துவிட்டது. பாதி அவன் கையில் சென்றுவிட்டது. எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் படபடப்பு ஆகிவிட்டது. அருகில் இருந்த ஒருவர் தான் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து சென்றார். உடனடியாக காவல் நிலையம் சென்றுவிட்டேன். சம்பவம் நடந்த 3 மணி நேரத்தில் அவனை போலீஸ் கைது செய்துவிட்டனர்.

காவல் துறைக்கு பாராட்டு

நானும் என்னுடைய அனைத்து விபரங்களையும் ஒப்படைத்துவிட்டேன். நீதிமன்றம் மூலம் செயினை வாங்க சொல்லியுள்ளனர். காவல்துறையின் செயலை பாராட்டியே ஆக வேண்டும். நான் செயின் திருப்பிக் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. சினிமா பார்த்தது போல இருந்தது. என் கணவர் வருவதற்குள் காவல்துறையினர் வந்து எனக்கு தண்ணீர் கொடுத்து இயல்பு நிலைக்கு திருப்பினர்.

இப்படியாகும் என நினைக்கவில்லை

அங்கிருந்து காவல்துறையினரே திருவான்மியூர், திருவல்லிக்கேணி அழைத்து சென்றனர். நகை மாற்ற போன இடத்தில் வைத்து தான் அவனை பிடித்தனர். பெருங்குடியில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. அருகிலேயே டாஸ்மாக் கடை உள்ளது. முன்பு நான் அங்கு நடந்து செல்வேன். இப்போது அதைத் தவிர்த்துவிட்டு ஆட்டோவில் சென்று வருகிறேன். ரயில் நிலையத்தில் இப்படி நடக்கும் என நினைக்கவில்லை.

ஒரு நிமிடத்திற்குள்

மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. எப்போதும் அங்கு காவலர்கள் இருப்பார்கள். நேற்று ஷிப்ட் முடிந்து அடுத்த ஆள் வருவதற்குள் இந்த சம்பவம் நடந்துவிட்டது. அவன் ஏதோ திட்டத்துடன் இருக்கிறான் என தெரிந்துவிட்டது. காவலர்களும் இல்லை, வேறு யாராவது வருவார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். எப்படி தப்பிப்பது என யோசிக்கும் போதுதான் இப்படி செய்துவிட்டான்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+