வங்கிகளில் வரலாற்று சம்பவம்.. ஒரே நாளில் cheque clear.. அக்டோபர் 4, ஜனவரி 3 ல் ஆர்பிஐ மேஜர் மாற்றம்
சென்னை: ஒரே நாளில் cheque clear ஆகும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 4 முதல் ஒரே நாளில் செக் கிளியர் ஆகும் வசதியை அனைத்து வங்கிகளும் அறிமுகப்படுத்த உள்ளன. எனவே இனிமேல் உங்கள் கணக்கில் செக் டெபாசிட் செய்தீர்கள் என்றால், அதே நாளில் பணம் உங்கள் கணக்கிற்கு வந்துவிடும். இனிமேல் இரண்டு/மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ரிசர்வ் வங்கி இந்த சீர்திருத்தத்தை அறிமுகம் செய்வது பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.
வங்கிகளில் பணப்பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு மாற்றங்களை ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறது. ஒருபுறம் யுபிஐ டிஜிட்டல் புரட்சிகள் நடந்துவரும் வேளையில், வங்கிகளில் பல்வேறு விஷயங்கள் மிக வேகமாக டிஜிட்டல் மயமானது. மக்கள் அனைத்திற்கும் வங்கிக்கு வருவது குறைந்தது. அதேபோல் சில செயல்பாடுகளை மேற்கொள்ள சில நாட்களாவது காத்திருக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால் படிப்படியாக பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது.

காசோலை கிளியர் ஆகும் நேரம் குறைகிறது
அந்த வகையில் வங்கி காசோலைகள் கிளியர் ஆவதற்கான நேரம் குறித்து ரிசர்வ் வங்கி தற்போது சூப்பர் மாற்றத்தை அறிவித்துள்ளது. இப்போது வரை வங்களில் ஒரு காசோலை கிளியர் ஆக ஒன்று அல்லது இரண்டு வேலை நாட்கள் ஆகும். ஆனால், தற்போது இந்த நடைமுறையை ரிசர்வ் வங்கி வேகப்படுத்தி உள்ளது. இனி வங்கிகளில் உங்கள் பணம் வர இரண்டு நாட்கள் வரை காத்திருக்க தேவையில்லை.. ஒரே நாளில் கிளியர் ஆகப்போகிறது.
இரவு 7 மணிக்குள் பணம் வந்துவிடும்
அதன்பின்னர் அன்று மாலை 7 மணிக்குள் சம்பந்தப்பட்ட வங்கி அந்தக் காசோலைக்கு வங்கிகள் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், அது தானாகவே ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட்டு, அந்த இரவே தீர்வாகி பணம் உங்களுக்கு வந்துவிடும். இந்த நடைமுறை அடுத்த அக்டோபர் 4 முதல் 2026 ஜனவரி 2ம் தேதி வரை இருக்கும்.
ஜனவரி 3 முதல் 3 மணி நேரத்தில் பணம் கிடைக்கும்
அதேநேரம் 2026 ஜனவரி 3ம் தேதி முதல், காசோலை கிளியர் முறையில், இரண்டாவது கட்டமாக இன்னும் வேகமாக மேம்படுத்தப்பட உள்ளது. இதன்படி வரும் 2026 ஜனவரி 3ம் தேதி முதல், காசோலையை வாங்கியதில் இருந்து 3 மணி நேரத்திற்குள் அதற்கான ஒப்புதலை சம்பந்தப்பட்ட வங்கிகள் கண்டிப்பாக வழங்க வேண்டும். உதாரணமாக, காலை 10 மணி முதல் 11 மணிக்குள் பெறப்பட்ட காசோலைக்கு மதியம் 2 மணிக்குள் வங்கிகள் கட்டாயம் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, பணம் பெறும் வங்கியானது வாடிக்கையாளரின் கணக்கில் பணத்தை ஒரு மணி நேரத்திற்குள் வரவு வைக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த மாற்றம் ஏன்
இந்த புதிய காசோலை கிளியரன்ஸ் நடைமுறை, காசோலை பரிவர்த்தனையை மிகவும் வேகமாகவும், திறமையாகவும் மாற்றும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது. அதேபோல் வாடிக்கையாளர்களுக்கு விரைவாகப் பணம் கிடைக்கும் என்பதுடன், பணப் பரிவர்த்தனைகளில் ஏற்படும் சிக்கல்களையும், தாமதங்களையும் நிச்சயம் வெகுவாக குறைக்கும் என்பதால் மக்களிடையே இத்திட்டத்திற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.
செக் ட்ரங்கேஷன் சிஸ்டம்
ஒரே நாளில் காசோலை கிளியர் செய்யும் திட்டத்தை பொறுத்தவரை "செக் ட்ரங்கேஷன் சிஸ்டம்" என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் காசோலைகளின் மின்னணுப் படங்கள் மட்டுமே அனுப்பப்படுவதால் எளிதாக கிளியர் செய்ய முடியும். எனவே பிரச்சனை இல்லாமல் காசோலை கிளியர் ஆகிவிடும். அதேநேரம் காசோலை வழங்கும் கணக்கில் எப்போதும் போதிய இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால், காசோலை பவுன்ஸ் ஆகி அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்த புதிய மாற்றங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications