சேரா, சோழா, பாண்டியா.. வானில் சங்கம் அமைத்து “சர்க்கஸ்”.. “புயல்” வேக சாகசம் காட்டும் விமானங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்று வரும் விமான சாகச நிகழ்வில் பங்கேற்றுள்ள விமானங்களுக்கு புயல், சங்கம், சேரா, சோழா, பாண்டியா, பல்லவா, ராம், காவிரி, காஞ்சி, தனுஷ், நீலகிரி, மெரினா, கார்த்திகேயா, மகாபலி என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சார்பில் வான் சாகச நிகழ்வு நடைபெற்று வருகிறது. 72 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஜெட் விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளன. ஏர் ஷோவில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் ஸ்டண்ட் ஷோக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

chennai air show 2024 iaf airshow 2024 indian air force 2024


இந்த விமான சாகச நிகழ்வில் பங்கேற்கும் விமானப்படை குழுக்களுக்கு மூவேந்தர்களைக் குறிப்பிடும் வகையில் சேரா, சோழா, பாண்டியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல, சாகசத்தில் ஈடுபடும் போர் விமானங்களுக்கு புயல், சங்கம், பல்லவா, காவிரி, காஞ்சி, நீலகிரி, மெரினா ஆகிய பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன.

சாகச நிகழ்வில் பங்கேறும் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் விவரங்கள் வருமாறு:

கண்கொள்ளாக் காட்சி.. சென்னை விமான வான் சாகசம்.. நேரில் செல்ல முடியாதவர்கள் “LIVE” ஆக பார்க்கலாம்!


1. ஆகாஷ் கங்கா குழு: இது இந்தியாவின் முதன்மை ராணுவ பாராசூட் காட்சிக் குழு. இவர்கள் 200 கிமீ வேகத்தில் இருந்து பாராசூட் மூலமாக நிலப் பகுதியை அடைந்தனர்.

2. சூர்ய கிரண் விமானக் குழு: இந்தக் குழுவினர் இந்திய விமானப்படையின் சாகச காட்சிக் குழுவினர். ஹாக் Mk 132 விமானத்தை கொண்டு சாகசத்தை நிகழ்த்தி உள்ளனர்.

3. சராங் குழு: 2003-ல் உருவாக்கப்பட்ட சாரங் குழு உலகிலேயே ஒரே ராணுவ சாகச ஹெலிகாப்டர் குழுவாக வளம் வருகிறது. ஹால்த் த்ருவ் ஹெலிகாப்டரை பயன்படுத்தி பிரமாண்ட சாகச நிகழ்வை நிகழ்த்தி உள்ளனர்.

4. தேஜஸ்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானம். சிறிய மற்றும் மிக எளிய ரக போர் விமானம்.

5. ஹார்வர்ட் (அமெரிக்காவில் இருந்து இந்தியா வாங்கிய போர் விமானம். இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பயிற்சி விமானம்.

6. டகோட்டா: இந்திய விமானப்படையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விமானம். காஷ்மீர், 1947 போரில் மற்றும் 1971 பங்களாதேஷ் போரில் முக்கிய பங்கு வகித்தது.

7. ரஃபேல்: பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட போர் விமானம். ரேடாரில் தென்படாமல் செயல்படும் தன்மை கொண்டது.

8. சுகோய் SU 30MKI: (ரஷ்ய வடிவமைப்பை கொண்டது. எல்லா வானிலை சூழ்நிலைகளிலும் செயல்படக் கூடிய பல நோக்கங்களைச் செயல்படுத்தக் கூடிய போர் விமானம்.

9. மிகோயான் MiG-29: சோவியத் காலத்தில் வாங்கப்பட்ட போர் விமானம்)

10. பிலாட்டஸ் PC-7: இந்திய விமானப்படையின் புதிய பயிற்சி விமானம் 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது.

11. C-295: இந்திய விமானப்படையின் புதிய போக்குவரத்து விமானம். 10 டன்கள் சரக்கு ஏற்றும் சக்தி கொண்டது.

12. டோர்னியர் 228 (Dornier 228) இரட்டை எஞ்சின் கொண்ட போர்த் திறன் கொண்ட விமானம். பல நோக்கங்களுக்காக கடல் ரோந்துப் பயன்பாட்டுக்கானது.

13. AEW&C: வான்பரப்பில் முன்னோக்கி செல்லும் மற்றும் கட்டுப்பாட்டுத் தகவல், அபாய சிக்னல்களை முன்கூட்டியே தரும் சக்தி கொண்டது.

14. IL-78 நான்கு எஞ்சின்கள் கொண்ட டேங்கர், 500-600 லிட்டர்கள் வேகத்தில் எரிபொருள் நிரப்பும் திறன் கொண்டது.

15. மிராஜ் (Mirage 2000): 4-ம் தலைமுறையின் போர் விமானம். நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட விமானம்.

16. P8i: இந்தியக் கடற்படையின் கடல்சார் ரோந்து விமானம், நீண்டகால புலனாய்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் விமானம்.

17. ஜாகுவார் (Jaguar): குண்டுகள் மற்றும் துல்லியமான ஆயுதங்களை எறியக்கூடிய விமானம். எதிரி நாடுகளை தகர்க்க பயன்படுத்தப்படக்கூடியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+