முதல்வர், பிரதமர் உரையுடன் நிறைவடைந்தது செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சிகள்

Subscribe to Oneindia Tamil

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகளில் மொத்தம் 187 நாடுகளின் 1,400 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் செஸ் போட்டிகளில் வென்ற கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில்தான் மொத்தம் 28 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். பிற மாநிலங்களில் ஒற்றை இலக்கத்தில்தான் கிராண்ட் மாஸ்ட்ர்கள் இருக்கின்றனர். அதனால் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தும் பெருமையை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்க விழாவின் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்

Chess Olympiad Live: PM Modi to inaugurate 44th Chess Olympiad in Chennai

Jul 28, 2022, 8:18 pm IST

நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா நிறைவடைந்தது
Jul 28, 2022, 8:11 pm IST

நாம் அனைவருமே வெற்றி பெறுபவர்கள்.. எதிர்கால வெற்றியாளர்கள் - மோடி. அனைவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் - பிரதமர் மோடி
Jul 28, 2022, 8:11 pm IST

தமிழகத்தில் பல கோவில்கள் பல விளையாட்டுப்போட்டிகளை குறிப்பதாக உள்ளன - பிரதமர் மோடி
Jul 28, 2022, 8:11 pm IST

தமிழகத்திற்கும் சதுரங்கத்திற்கும் நீண்ட தொடர்பு உள்ளது - பிரதமர் மோடி
Jul 28, 2022, 8:11 pm IST

தமிழகம் வலிமையான கலாச்சார பெருமைகளைக் கொண்டது - பிரதமர் மோடி. பல கிராண்ட் மாஸ்டர்களை கொண்டுள்ளது தமிழகம் - பிரதமர் மோடி. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதன் மூலம் சென்னை, மாமல்லபுரத்தின் சுற்றுலா வளர்ச்சியடையும் - மோடி
Jul 28, 2022, 8:09 pm IST

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைத்து பிரதமர் மோடி பேசி வருகிறார். இன்று தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது
Jul 28, 2022, 8:04 pm IST

அதிதி தேவோ பவ என்று பல்லாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பெருமையுடன் சொல்லப்பட்டுள்ளது - பிரதமர் மோடி. விருந்தோம்பல் பற்றி திருக்குறளில் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது - பிரதமர் மோடி
Jul 28, 2022, 8:03 pm IST

இந்தியாவுக்கு கறுப்பு நிற காய்

மகளிர் பிரிவில் இந்தியா கறுப்பு நிற காய் வைத்து விளையாடுகிறது. காய்களின் நிறத்தை பிரதமர் மோடி தேர்ந்து எடுத்தார்
Jul 28, 2022, 8:03 pm IST

75வது சுதந்திர தின விழா நடைபெறும் நேரத்தில் செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் நடைபெறுவது பெருமை - மோடி
Jul 28, 2022, 8:03 pm IST

குட் ஈவினிங் சென்னை.. வணக்கம் என்று கூறி பிரதமர் மோடி பேச்சு. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன் - மோடி
Jul 28, 2022, 8:02 pm IST

அறிவுக்கூர்மையும் வியூகமும் கொண்ட விளையாட்டு சதுரங்கம் - முதல்வர் ஸ்டாலின். அரசர்களின் விளையாட்டு என்று சொல்லப்பட்டது இன்று மக்களின் விளையாட்டாக மாறியுள்ளது - ஸ்டாலின். இது அதிர்ஷ்டத்தின் விளையாட்டு அல்ல அறிவுத்திறனை வெளிப்படுத்தும் விளையாட்டு - ஸ்டாலின். மாணவர்கள் அனைவருக்கும் இந்த செஸ் விளையாட்டுப் போட்டியை கொண்டு சேர்க்க வேண்டும் - ஸ்டாலின்
Jul 28, 2022, 7:53 pm IST

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தம்பி சின்னம் பற்றி முதல்வர் ஸ்டாலின் விளக்கம். பேரறிஞர் அண்ணா அனைவரையும் தம்பி என்றே அழைப்பார் - முதல்வர் ஸ்டாலின்
Jul 28, 2022, 7:50 pm IST

இலக்கியம், கல்லணை, ராஜராஜ சோழன் என தமிழ் பெருமைகளை பேசிய செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா
Jul 28, 2022, 7:50 pm IST

நான்கே மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான சென்னையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன - முதல்வர். தமிழகத்தின் கிராண்ட் மாஸ்டர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தமிழகத்தில் அதிக கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர் - முதல்வர் ஸ்டாலின்
Jul 28, 2022, 7:47 pm IST

குஜராத் முதல்வராக இருந்த போது செஸ் விளையாட்டுப்போட்டியை நடத்தியவர் பிரதமர் மோடி - முதல்வர். 44வது செஸ் ஒலிம்பியாட் தமிழ்நாட்டில் நடப்பதற்கு தமிழக அமைச்சர்கள் சிரத்தை எடுத்துக்கொண்டனர் - முதல்வர். கடின உழைப்பு காரணமாக தமிழகத்திற்கு இத்தகைய பெருமை கிடைத்துள்ளது - முதல்வர்
Jul 28, 2022, 7:44 pm IST

1967க்கு முன் இருந்த தமிழகத்தின் பெருமைகளை சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சிகள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட். இலக்கியம், கல்லணை, ராகராஜ சோழன் என தமிழ் பெருமைகளை பேசிய செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா. சிறப்பான தொடக்க விழாவிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
Jul 28, 2022, 7:43 pm IST

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா எழுச்சியோடு நடைபெற்றுள்ளது - முதல்வர் ஸ்டாலின். கொரோனா தொற்றால் பிரதமரை என்னால் நேரில் சென்று அழைக்க முடியாமல் போய் விட்டது - முதல்வர் ஸ்டாலின்
Jul 28, 2022, 7:43 pm IST

இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் நாளாக இது அமைந்துள்ளது - முதல்வர் ஸ்டாலின். செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் வாய்ப்பு தமிழகத்திற்கு கிடைத்தது பெருமை - ஸ்டாலின்
Jul 28, 2022, 7:41 pm IST

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன் - முதல்வர் ஸ்டாலின். 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
Jul 28, 2022, 7:40 pm IST

பிரக்ஞானந்தாவுக்கு கவுரவம்

செஸ் ஒலிம்பியாட் ஜோதியை தமிழக வீரர் பிரக்ஞானந்தா பெற்று கொண்டு, ஜோதியை ஏற்றினார்
Jul 28, 2022, 7:35 pm IST

நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது
Jul 28, 2022, 7:34 pm IST

செஸ் ஒலிம்பியாட் சுடரை பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினிடம் அளித்தார் விஸ்வாதன் ஆனந்த். தமிழகத்தின் கிராண்ட் மாஸ்டர்கள் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை முதல்வரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்
Jul 28, 2022, 7:33 pm IST

அனுராக் தாக்கூர் பெருமிதம்

3 மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகத்தில் வேறு யாராலும் நடத்த முடியாது. ஆனால் இந்தியா நடத்தி காட்டியுள்ளது - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
Jul 28, 2022, 7:32 pm IST

செஸ் ஒலிம்பியாட் ஜோதியின் பயணம் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. 75 மாநகரங்களில் பயணித்து சென்னை வந்துள்ளது செஸ் ஒலிம்பியாட் ஜோதி. 75வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் ஒலிம்பிக் ஜோதி 75 மாநகரங்களில் பயணித்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏந்தி மேடைக்கு வந்தார் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்
Jul 28, 2022, 7:30 pm IST

செஸ் ஒலிம்பியாட்: விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர் படம் இடம்பெற ஹைகோர்ட் உத்தரவு. மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் உத்தரவு. அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பிரதமர், குடியரசுத் தலைவர் பயன்படுத்தப்பட வேண்டும் - ஹைகோர்ட்
Jul 28, 2022, 7:30 pm IST

இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை காணும் வாய்ப்பு பெற்றுள்ளோம் - அனுராக் தாகூர்
Jul 28, 2022, 7:24 pm IST

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் வணக்கம் என்று தமிழில் சொல்லி மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் சிறப்புரை
Jul 28, 2022, 7:17 pm IST

சமூக நீதியின் காவலர் பிரதமர் மோடி - எல்.முருகன் புகழாரம். தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற முக்கிய காரணம் பிரதமர் மோடி - எல். முருகன். பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் இணைந்து மிகப்பெரிய செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியுள்ளனர் - எல். முருகன்
Jul 28, 2022, 7:14 pm IST

செஸ் ஒலிம்பியாட் துவக்கவிழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன் சிறப்புரையாற்றுகிறார். பிரதமர், ஆளுநர் பெயரை சொன்ன போது அமைதியாக இருந்தனர். முதல்வர் ஸ்டாலின் பெயரை எல்.முருகன் சொன்ன உடன் அனைவரும் கரகோஷம் எழுப்பினர்
Jul 28, 2022, 7:10 pm IST

குடைகளில் இந்திய தேசியக்கொடியை காண்பித்து அசத்தினர் நடன கலைஞர்கள்
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+