செட்டிநாட்டை வைத்து சீனாவிற்கு.. செக் வைக்கும் ஸ்டாலினின் பிளான்.. ரெடியாகும் பிரம்மாண்ட ஏரோநாடு
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல விமான ஓடுதளங்கள், விமான நிலையங்கள், பயன்படுத்தப்படாத விமான மையங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் பயன்பாட்டிற்க்காகவும், பாதுகாப்பு பயன்பாடுகளுக்காவும் இந்த விமான ஓடுதளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
முக்கியமாக தென் தமிழ்நாட்டின் பொருளாதார ஆற்றலை வெளிக்கொணரவும், மாநிலத்தின் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து சூழலை வலுப்படுத்தவும், காரைக்குடி அருகேயுள்ள பயன்படுத்தப்படாத செட்டிநாடு விமான ஓடுதளத்தை ரூ. 3.97 கோடி செலவில் "செட்டிநாடு ஏரோநாடு விமானப் போக்குவரத்து மையமாக" மாற்ற, தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

செட்டிநாடு ஏரோநாடு விமானப் போக்குவரத்து மையம்
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி வாரியம் (TIDCO) மூலம் வெளியிடப்பட்ட இத்திட்டம், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகாவில் உள்ள கானாடுகாத்தான் கிராமத்தில் அமையவுள்ள மையத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தனியார் பங்களிப்பைக் கோருகிறது. ஒப்பந்தத் தேதியிலிருந்து ஐந்து மாதங்களுக்குள் ரூ. 3.97 கோடி மதிப்பில் பணிகள் நிறைவடையும்.
டெண்டர் ஆவணங்களின்படி, முதல் கட்டமாக நிலம், புதர்கள் அகற்றுதல், 1.4 கி.மீ. உள் சாலைகள், ஆழ்துளைக் கிணறுகள், நீர், மின் விநியோக அமைப்புகள், தெருவிளக்குகள் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வணிகப் பயணிகள் அல்லாத, பிராந்திய விமானப் போக்குவரத்து மற்றும் பயிற்சி மையமாக இதை உருவாக்குவதே நோக்கம் என அதிகாரிகள் கூறினர்.
விமானி பயிற்சி, ஆளில்லா விமான இயக்கத்தில் தமிழகத்தை தேசிய அளவில் முன்னணியில் கொண்டுவரும் அரசின் உத்திக்கு ஏற்ப, FTOக்கள், டிரோன் சோதனை, பைலட் பயிற்சிகளுக்கு இந்த ஓடுதளத்தை ஒதுக்குவது தீவிர பரிசீலனையில் உள்ளது. 2023-ல் சேலம் விமான நிலையம் (மாநிலத்தின் முதல் FTO) செயல்படத் தொடங்கியது. கோவில்பட்டியும் இதே பயன்பாட்டிற்குத் தயாராகி வரும் நிலையில், செட்டிநாடு மூன்றாவது மையமாகிறது.
பாதுகாப்பு பயன்பாடு
இந்த விமான மையங்கள் பாதுகாப்பு பயன்பாட்டிற்கு உதவும். அதாவது அவசர காலங்களில் விமானப்படை விமானங்கள் தரையிறங்க பயன்படுத்தப்படும். அதேபோல் விமானப்படை ஹெலிகாப்டர்கள், தலைவர்கள் வரும் போது ஹெலிகாப்டர்கள் களமிறங்க இந்த மையங்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்படும்.
சீனா இந்திய பெருங்கடலை குறி வைக்கும் நேரத்தில் தமிழ்நாட்டில் சிறிய நகரங்களில் இதுபோன்ற விமானதளங்கள், ஓடுதளங்கள் அமைக்க வேண்டியது கட்டாயம். இந்திய பெருங்கடலில் ஆதிக்கமும் செலுத்த சீனா காய் நகர்த்தி வருகிறது. இது போன்ற சூழலில்.. எதிர்காலங்களில் பிரச்சனைகள் ஏற்படும் போது தென் தமிழ்நாட்டில்.. முக்கியமாக சிறிய நகரங்களில் ஓடுதளங்கள் அமைப்பது அவசியம் ஆகும். இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல விமான ஓடுதளங்கள், விமான நிலையங்கள், பயன்படுத்தப்படாத விமான மையங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான முன்கூட்டிய சாத்தியக்கூறு ஆய்வுகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட இரு இடங்களை ஒரு குழு அண்மையில் ஆய்வு செய்தது. மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசு, உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் சுற்றுலாவை ஊக்கப்படுத்தவும் இங்கு விமான நிலையம் அமையும் என அறிவித்திருந்தது.
அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஜூலையில் ஐந்து சாத்தியமான இடங்கள் அடையாளம் காணப்பட்டன. ஆகஸ்ட் மாத வாக்கில், உச்சிப்புளி மற்றும் கீழக்கரை என இரண்டு இடங்களை அரசு தேர்வு செய்தது. அவற்றின் சாதக பாதகங்களை ஆய்வு செய்ய ஏஏஐ-யை அரசு கோரியது. அதன்படி, அக்டோபர் இறுதியில் ஏஏஐ குழுவினர் இரு இடங்களைச் சுற்றியுள்ள கிராமங்களை ஆய்வு செய்தனர்.
ராமேஸ்வரத்தில் விமான நிலையம்
முதல் இடமான உச்சிப்புளி அருகே பெருங்குளம், கும்பாரம், வலந்தரவை கிராமங்கள் உள்ளன. இந்திய கடற்படை விமான நிலையமான ஐஎன்எஸ் பருந்துக்கு அருகே அமைந்துள்ளதால், "மாநில அரசு இதைத் தேர்வு செய்தால் கடற்படையின் ஒப்புதல் தேவை" என்று ஒரு வட்டாரம் கூறியது. ராமேஸ்வரம் கோயிலிலிருந்து (சுமார் 40 கி.மீ) ஒரு மணிநேரப் பயணத்திலும், ராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து அரை மணிநேரத்திலும் இந்த இடத்தை அடையலாம்.
கீழக்கரை அருகேயுள்ள இரண்டாவது தளத்தின் அண்டை கிராமங்கள் மணிக்கநேரி, மாயாங்குளம். ராமேஸ்வரம் கோயிலிலிருந்து இங்கு செல்ல ஒன்றரை மணிநேரம் ஆகும். ராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து அரை மணிநேரத்தில் இந்த இடத்தை அடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications