உடலில் கிழிந்த சதை.. கோவை வீராங்கனை இறப்புக்கு சிக்கன் ரைஸ் காரணமில்லை.. போலீஸ் தந்த விளக்கம்
சென்னை: கோவை கூடைப்பந்து வீராங்கனை ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக தகவல்கள் வெளியானது. இதனை ரயில்வே நிர்வாகம் முற்றிலுமாக மறுத்த நிலையில் மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
கோவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின் டென்னிஸ் (40). இவருடைய மகள் பெயர் எலினா லாரெட் (15). இவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

எலினா கூடைப்பந்து வீராங்கனையாக உள்ளார். இதனால் பள்ளி சார்பில் பல இடங்களில் நடக்கும் கூடைப்பந்து போட்டிகளில் எலினா பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் தான் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடந்த கூடைப்பந்து போட்டியில் எலினா தனது அணியினருடன் பங்கேற்றார். இதற்காக அவர் கடந்த 8 ம்தேதி ரயிலில் குவாலியர் சென்று போட்டியில் பங்கேற்றார். போட்டி முடிந்த பிறகு அவர் பிற மாணவிகளுடன் நேற்று முன்தினம் ரயிலில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது மாணவி எலினா ரயிலில் சிக்கன் ரைஸ், பர்க்கர் வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவருக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வயிற்று வலியால் மாணவி எலினா பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சென்னை வந்ததும் தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் அவர் உடல்நலம் தேறினார்.
அதன்பிறகு சென்னை பெரவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே எலினா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதன்பிறகு உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே தான் மாணவி ரயில் கோவை வீராங்கனை உயிரிழப்புக்கு ரயிலில் வழங்கப்பட்ட சிக்கன் ரைஸ், பர்க்கர் தான் காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதனை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளார். இதுதொடர்பாக ரயில்வே சார்பில், ‛‛மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து மாணவி கிளம்பிய விரைவு ரயிலில் சிக்கன் ரைஸ் ஐஆர்சிடிசி விநியோகிக்கும் உணவுப்பட்டியலில் கிடையாது" என்று தெளிவுப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தான் மாணவி எலினாவின் இறப்புக்கு சிக்கன் ரைஸ் காரணம் இல்லை என்று பெரவள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில், ‛‛மாணவி எலினா இறப்புக்கு சிக்கன் ரைஸ் காரணம் இல்லை. அந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது உடலில் வயிறு, மார்பு பகுதியில் சதைகள் கிழிந்துள்ளது. இதனால் இதயம் செயலிழந்து இறந்து இருக்கலாம். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது''என்று கூறியுள்ளனர்.
-
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications