இனி மைலார்ட், லார்ட்ஷிப்.. இதெல்லாம் வேண்டாம்.. சிம்பிளா சார்னு கூப்பிடுங்க.. ஹைகோர்ட் தலைமை நீதிபதி
சென்னை: இனி மை லார்ட், லார்ட்ஷிப் போன்ற ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய முறைகளை கைவிட்டுவிட்டு சார் என்று அழைத்தால் போதும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
Recommended Video

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் முன்சீப் மற்றும் நீதித் துறை நடுவர் நீதிமன்ற திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் சென்னையிலிருந்து தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.
அப்போது சஞ்ஜீவ் பானர்ஜி பேசுகையில், காலனித்துவ, நிலப்பிரபுத்துவ முறையை குறிக்கும் மை லார்ட், லார்ட் ஷிப் என நீதிபதிகளை அழைக்கும் முறைகளை நாம் கைவிட வேண்டும். மரியாதை நிமித்தமாக சார் என்று அழைத்தாலே போதுமானது.

விவசாய நிலங்கள்
நாட்டின் தற்போதைய வளர்ச்சி விகிதமாக விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது. அப்படி செய்தால் மக்களின் உணவை பறிக்கும் செயலாக அது அமைந்து விடுகிறது. நிலம் மற்றும் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து ஏராளமான வழக்குகள் வருகின்றன.

வளர்ச்சி
நிலம் ஒரு பற்றாக்குறையான பொருளாக மாறி வருகிறது. ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வனவிலங்குகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. எனவே அண்மையில் வளர்ச்சிக்காக என்று எடுக்கப்பட்ட காட்டு நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

காட்டு வழித்தடங்கள்
வன வழித்தடங்களை மீண்டும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கண்ணுக்குத் தெரியாத வைரஸ் பலரை மரணத்தில் தள்ளியுள்ளது. எனவே நாம் இயற்கையோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டும். வளர்ச்சி மீது அக்கறை கொள்ளும் அதே நேரத்தில் இயற்கை மற்றும் விலங்குகள் மீதான மாண்பை காண்பித்து இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

சட்டப்பணிகள்
நீதிமன்றம் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் மூலம் தீர்வை வழங்கும் நீதிபதிகள், சமூகத்தில் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கு உள்ள அதிகாரம் மற்றும் சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். நீதிமன்றத்தை திறந்து வைப்பது குறித்து பெருமை தெரிவிக்கும் அதே நேரத்தில் சாமானியர்களின் கட்டுமானங்கள் மட்டுமே நீதியை வழங்கிவிடாது என தெரிவித்தார்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications