“மிகுந்த வேதனை".. கோயில் குளத்தில் மூழ்கி இறந்த 5 பேர் குடும்பத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் இரங்கல் குறிப்பில், "செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோயில் தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக இன்று காலை 9.30 மணியளவில், கோயில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி, திரு. சூர்யா (வயது-22), திரு. பானேஷ் (வயது-22), திரு.ராகவன் (வயது-22) திரு. யோகேஸ்வரன் (வயது-21) மற்றும் திரு. ராகவன் (வயது-18) ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

Chief Minister condoles family of 5 drowned in temple pond and announced relief

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+