சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார்.

லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. அந்த கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய கட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சிதம்பரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் போட்டியிடுகிறார். அவர் திமுக சின்னத்தில் களம் காண்கிறார்.

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்... மதுரை ஹைகோர்ட் உத்தரவு எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்... மதுரை ஹைகோர்ட் உத்தரவு

திருமாவளவன் பேட்டி

திருமாவளவன் பேட்டி

இந்நிலையில் சென்னையில் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு ,ஆந்திரா ,கேரளா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 15 தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது .

சின்னம் தந்ததற்கு நன்றி

சின்னம் தந்ததற்கு நன்றி

சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் நான் போட்டியிடுகிறன். பானை சின்னம் நிரந்தரமாக கிடைக்க நம்புகிறேன். அந்த சின்னம் ஒதுக்கிய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி.

ஆயுள் குறைகிறது

ஆயுள் குறைகிறது

விசிக தேர்தல் அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அந்த ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது.

தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரம்

7 பேர் விடுதலையில் எந்த சட்ட சிக்கலும் இல்லை. அவர்களின் விடுதலை முடிவு ஆளுநர் கையில் உள்ளது. மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளேன் என்று கூறினார்.

English summary
Chief Minister Edappadi Palanisamy government life in the state has been declining day by day, says Thirumavalavan. Chief Minister Edappadi Palanisamy government life in the state has been declining day by day, says Thirumavalavan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X