ஒரு மாத ஊதியத்தை புயல் நிவாரண நிதியாக வழங்கிய முதல்வர் ஸ்டாலின்! எம்எல்ஏ, எம்பிக்களுக்கும் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களும் நிவாரண நிதியை வழங்க வலியுறுத்தியுள்ளார்.

வழக்கமாக சாதாரண பருவமழைக்கே சென்னை ஒரு மாதிரி கசகச என்றுதான் இருக்கும். இந்நிலையில், கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வேளச்சேரி போன்ற புறநகர் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியவில்லை.

 Chief Minister M.K.Stalin donated his one month salary to Cyclone Michaung relief fund

மீட்பு பணிகள் இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஒருமாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குகின்றேன். அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும், புயலினால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வங்கி விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,

தமிழ்நாட்டில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக தமிழ்நாடு முதலமைச்சரும், அமைச்சர்களும், திமுகவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடவுள்ளார்கள்.

இந்தச் சூழ்நிலையில் நல்லுள்ளம் கொண்ட பல்வேறு தொழில் நிறுவனங்களும் தன்னார்வ அமைப்புகளும் பொது மக்களும் இந்த மாபெரும் பணிக்கு தங்களது பங்களிப்பினையும் வழங்கிட விருப்பம் தெரிவித்து, அரசைத் தொடர்பு கொண்டு வருகிறார்கள். எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைத்திடவும், புதிய வாழ்வாதாரங்களை மீள உருவாக்கிடவும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும், தன்னார்வலர்களும் பொதுமக்களும் முதலமைச்சர் பொது நிவாரண நிதி வாயிலாக மிக்ஜாம் மீட்புப் பணிகளுக்குத் தங்களின் பங்களிப்பை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(G)-ன்கீழ் 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIS) அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்று) சட்டம் 2010, பிரிவு 50-ன்கீழ் விலக்களிக்கப்படும்.

(1) வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி பற்றுச் சீட்டினைப் (Receipt) பெற்றுக்கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

https://cmprf.tn.gov.in

(2) Electronic Clearing System (ECS) / RTGS / NEFT

கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்.

வங்கி பெயர் : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,

கிளை : தலைமைச் செயலகம், சென்னை 600 009

சேமிப்புக் கணக்கு எண் : 117201000000070

IFS Code : IOBA0001172

For International Payment

A/c Number : 11720 10000 00070
Bank : Indian Overseas Bank
Branch : Secretariat Branch, Chennai 600 009
SWIFT CODE : IOBAINBB001

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+