புதுப்பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
சென்னை: சென்னையின் புகழ்மிக்க அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் வள்ளுவர் கோட்டம் ரூ.80 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கவுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் 1974-1976 ஆம் ஆண்டுகளில் முன்னாள் முதல் கருணாநிதியால் வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது. 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னமானது திராவிட மற்றும் பல்லவர் கட்டடப் பாணியில் கட்டப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த வள்ளுவா் கோட்டம் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பாழடைந்து கிடந்தது. இந்நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் ரூ.80 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த வள்ளுவா் கோட்டத்தில், 20,000 சதுர அடி பரப்பில் 1,548 இருக்கைகளுடன் அதிநவீன ஏர் கண்டிஷனர் வசதிகளுடன் கலையரங்கம் மேம்படுத்தப்பட்டுள்ளது. 1330 திருக்குறள்களும் பளிங்கு கற்களில் செதுக்கப்பட்டுள்ளன.
100 போ் அமரும் வசதியுடன் திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
3,336 சதுர அடியில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் 72 போ் வரை அமரும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 27,000 சதுர அடி பரப்பில் தரை நிலை பகுதிகளில் 164 காா்கள் வரை நிறுத்துவதற்கான வசதிகள் உள்ளன. 106 அடி கல் தேர் ஒலி- ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் வகையில் காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளன.
ஏராளமான சிறப்பு அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவா் கோட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டான் இன்று திறந்து வைக்கவுள்ளார்.
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications