MK Stalin: முதலமைச்சர் முக ஸ்டாலின் நடைப்பயிற்சி சென்ற போது தலைசுற்றல் - அப்போலோ மருத்துவமனை அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இன்று காலை வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொண்டபோது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதையடுத்து பரிசோதனை செய்து கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்போலா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சி தேனாம்பேட்டையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதன் பிறகு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இதனிடையே ஸ்டாலினுக்கு அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் முக்கிய அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர்.

Chief Minister MK Stalin

சென்னை கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்நிலையில் அவர் மருத்துவ பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியது. அரசு கள ஆய்வு பணிகளுக்காக அவர் தொடர்ந்து வெளி மாவட்டங்களுக்கு பயணம் செய்து வருகிறார்.

நாளை மற்றும் நாளை மறு நாள் ( செவ்வாய், புதன் கிழமை) அவர் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். ஓய்வின்றி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருவதால் சற்று முன்பு க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொடர்ந்து பயணங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அதனால் இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என்று சொல்லப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக கூறப்பட்டது. முக்கியமாக ஓய்வின்றி கள ஆய்வில் ஈடுபட்டு வருவதால், இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது அறிகுறிகளுக்கு ஏற்ப அவருக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+