யார் யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 கிடைக்கும்.. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பட்டியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர், சொற்ப ஊதியங்களில் வேலை செய்திடும் மகளிர், இல்லங்களில் பணியாற்றும் மகளிர் என ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் பயன்பெறுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

அண்மையில் தமிழ்நாடு பட்ஜெட்டில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 'தகுதிவாய்ந்த' என்ற வார்த்தைக்கான காரணம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இதன் பின்னர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் விளக்கம்

மு.க.ஸ்டாலின் விளக்கம்

அதில், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத பல உன்னதமான திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் மகத்தான திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கான சமூக பொருளாதாரத்தை மீட்க எவ்வளவோ தலைவர்கள் வந்தாலும் பெரியாரின் சுயமரியாதை இயக்கமே பெண் விடுதலைக்கு பாதை அமைத்தது.

பெண்களின் விலைமதிப்பில்லா உழைப்பு

பெண்களின் விலைமதிப்பில்லா உழைப்பு

கிராம பொருளாதாரத்தை சுமப்பதாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்க முடியாது. ஒரு ஆணுடைய வெற்றிக்காகவும், குழந்தைகளின் கல்வி, சமூகத்திற்காகவும் எத்தனை மணி நேரங்கள் அவர்கள் உழைத்திருப்பார்கள். அவர்களுக்கான ஊதியம்தான் இது. ஆண்கள் அங்கீகரித்தால் பெண்களுக்கான சமூக உரிமை வழங்கிடும் நிலை உருவாகும் என இந்த அரசு நம்புகிறது. பல்வேறு வகைகளில் விலைமதிப்பில்லாத உழைப்பை வழங்கும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள்.

யாரெல்லாம் பயன்பெறுவார்கள்

யாரெல்லாம் பயன்பெறுவார்கள்

நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலை கடற்கரை விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகளில் சொற்ப ஊதியங்களில் வேலை செய்திடும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணியாற்றும் மகளிர் என பலரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் பயன்பெறுவார்கள். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

ஏறத்தாழ ஒரு கோடி மகளிர்

ஏறத்தாழ ஒரு கோடி மகளிர்

இந்த திட்டத்திற்கான முதல் நொக்கம் பெண்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது தான். இரண்டாவது நோக்கம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகும். இதனை செய்ய முடியுமா, நிதி இருக்குமா என்று கேள்வி எழுப்பி, அச்சத்தை வெளிப்படுத்தி வந்தவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக நீதி திட்டங்களிலேயே மாபெரும் முன்னெடுப்பாக வரலாற்றில் விளங்க மகத்தான மகளிர் உரிமை தொகை வழங்கக் கூடிய திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அமைந்திடும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

ரூ.7000 கோடி

ரூ.7000 கோடி

சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் பெண் இருக்கிறார். தாய் மனைவி சகோதரி ஆணுக்கு பின்னால் பெண் இருக்கிறார். நீதிக்கட்சி முதலே பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக 7000 கோடி இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் கிடைக்காது என எல்லோரும் மனக்கணக்கு போட்டுக் கொண்டு வருகிறார்கள் என கூறினார்.

வங்கிக் கணக்கில் பணம்

வங்கிக் கணக்கில் பணம்

மேலும், உரிமை தொகை திட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டது என்றும், இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். குடும்பத் தலைவிகளின் உழைப்பை அங்கீகரிக்கவே மகளிர் உரிமை திட்டம் என்றும், பெண்களின் வங்கி கணக்கிற்கே மகளிர் உரிமைதொகை செலுத்தப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+