சமூக ஊடகங்களில் பரவுது.. அமைச்சர்கள் கவனமாக பேச வேண்டும்.. ஸ்டாலின் சொன்னது என்ன?
சென்னை: பொதுவெளியில் அமைச்சர்கள் கவனத்துடன் பேச வேண்டும்.. மூத்த அமைச்சர்கள் பேசுவது சமூக ஊடகங்களில் பரவுவதை காண முடிகிறது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரிய சர்ச்சையானது. அந்த சர்ச்சைக்கு இன்று காலை தான், உங்களில் ஒருவன் நிகழ்ச்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்தார்.

முதல்வர் ஸ்டாலின் பிடிஆர் ஆடியோ சர்ச்சை பற்றி இன்று வெளியிட்ட வீடியோவில் "இந்த ஆடியோ குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே 2 முறை விளக்கம் அளித்துவிட்டார். இந்த மட்டமான ஆடியோ அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை. மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மட்டமான அரசியல் செய்யும் நபர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை" என்று கூறினார்.

இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் எல்லா அமைச்சர்களுமே கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதுகுறித்தும், முதலீட்டாளர் மாநாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் பெட்ரோனஸ், காட்டர் பில்லர் உளளிட்ட ஐந்து நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்க ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுவெளியில் அமைச்சர்கள் கவனத்துடன் பேச வேண்டும். மூத்த அமைச்சர்கள் பேசுவது சமூக ஊடகங்களில் பரவுவதை காண முடிகிறது என இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. '
முன்னதாக அமைச்சர்கள் சிலர் கோபத்துடன் பொதுவெளியில் பேசிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி இருந்ததை கொண்டே முதல்வர் ஸ்டாலின் இப்படி பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications