Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மகிழ்ச்சி.. ரூ.497 கோடி நிலுவை தொகையை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2457 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களின் நிலுவைத்தொகை ரூ.497.32 கோடியை வழங்கியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (2.6.2020 தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரையிலான காலக்கட்டங்களில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயன்களின் நிலுவைத் தொகையான ரூ.497.32 கோடியினை 2457 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, 6 ஓய்வு பெற்ற போக்குவரத்துக் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்கள்.

Chief Minister MK Stalin has disbursed ₹ 497.32 crore of pension cash benefits for retired transport workers

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு எஸ். ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப, முதன்மை நிதி அலுவலர், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்,

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+