வருமான வரி கட்டுவோர்.. அரசு ஊழியர்கள்.. பொங்கல் பரிசில் முதல்வர் ஸ்டாலின் செய்த பெரிய மாற்றம்
சென்னை: எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் இருந்து தரப்படும் பொங்கலுக்கான ரொக்க பரிசு 1000 வழங்கும் திட்டத்தில் முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் மிகப்பெரிய மாற்றத்தை செய்திருக்கிறார். என்ன செய்தார் என்பதை இப்போது பார்ப்போம்.
பொங்கல் பரிசாக பச்சரிசி, கரும்பு, வெல்லம் உள்பட பொங்கலுக்கு தேவைவயான தொகுப்புகள் வழங்கப்படும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ரொக்கமாக பணம் வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் அரசின் சார்பில் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விரைவில் பொங்கல் பரிசு தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார் என்று கூறியிருந்தார்.

இதனிடையே சென்னை வெள்ளம், தென் மாவட்ட வெள்ளங்களுக்கு அடுத்தடுத்து 6000 ரூபாய் அரசு வழங்கிய நிலையில் பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்கப்படுமா இல்லையா என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே நிதிநெருக்கடிக்கு நடுவில் இதுபற்றி ஆலோசனையும் அரசு சார்பில் நடந்தது. இந்நிலையில் அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு தருவது என அரசு முடிவெடுத்தது.
இதுபற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும், ஏன், மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-ம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி, சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10-ம் தேதியன்றே, மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இந்த அறிவிப்பில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அதுவும் 1000 ரூபாய் யாருக்கெல்லாம் வழங்கலாம் என்பதில் அவர் கொண்டு வந்த மாற்றம் தான். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசு இல்லை என்பது தான்.
இதில் என்ன கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்ன என்கிறீர்களா ? பொங்கல் பரிசு 1000 ரூபாய் வருமான வரி கட்டுவோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தரப்படாது என்று தனியாக அறிவிக்கப்பட்டது தான். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் இருந்து தான் பொங்கலுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் நடைமுறை இருக்கிறது. சரியாக சொல்வது என்றால் 20188 முதல் இந்த நடை முறை இருக்கிறது.அதற்கு முன்பும் இருந்தது என்றாலும் பொங்கல் பரிசும், 100 ரூபாயும் தான் ரொக்கமாக வழங்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்குமே பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் வருமான வரி கட்டுவோர், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு இல்லை என்று அறிவித்திருப்பது இதுவே முதல்முறையாகும். நிதி நெருக்கடி காரணமாக அரசு இவர்களுக்கு வழங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. வருமான வரி கட்டியவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்கிறவர்கள், அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படவில்லை.அதே பாணியில் தான் பொங்கல் பரிசு வருமான வரி கட்டுவோருக்கும், அரசு ஊழியர்களுக்கும் அறிவிக்கப்படவில்லை என்பது தெரிய வருகிறது.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications