வண்டியை நிறுத்துங்க.. திடீரென உள்ளே வந்த ஸ்டாலின்.. காட்டாங்குளத்தூரில் அதிர்ந்த அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைமலைநகரில் ஆய்வு கூட்டத்திற்கு இன்று காலை முதல்வர் ஸ்டாலின் சென்றார். செல்லும் வழியில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று திடீரென ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேள்விகள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்கிறார்.

Chief Minister MK Stalin is going to conduct a 2-day inspection in Chennai suburban areas

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்வது வழக்கம்.இதேபோல், வளர்ச்சி திட்டப் பணிகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு மேற்செய்வதும் வழக்கம்

அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக நேரில் சென்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து இன்று முதல் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்கிறார்.

Chief Minister MK Stalin is going to conduct a 2-day inspection in Chennai suburban areas

இதற்கான ஆய்வுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக பயிற்சி நிலையத்தில் இன்று (அக் 17), நாளை (அக் 18) நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் பங்கேற்கிறார்கள். இதில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து விவாதிக்கப்படுகிறது. நாளை (அக் 18) வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் விவாதிக்க உள்ளார்.

அப்போது பொதுமக்களிடம் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கோரிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மக்களின் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தார்கள். இந்த ஆய்வுக்கு பின் மறைமலைநகருக்கு ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+