மத்திய அரசை அதிர வைக்கும் தமிழ்நாடு.. பொருளாதாரம் செழிக்க ஐவர் குழு என்ன செய்ய போகிறார்கள்?
சென்னை : தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும்,. நிதி நிலையை சீரமைக்கவும், ஐந்து பேர் அடங்கிய குழு பொருளாதார ஆலோசனைக் குழு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கப்போகிறது. இந்த ஐந்து பேர் குழுவின் பணிகள் என்ன என்பதை தமிழக நிதியமைச்சர் பிடிஆரின் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த மே 7ம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்றது. புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை நடந்தது. முதல் நாளில் தமிழகத்தின் ஆளுநர் அரசின் திட்டங்களை உரையாக வாசிப்பது வழக்கம்.
இந்த வகையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் தமிழத்தில் உள்ள நிதி நிலையை சீர் செய்யவும் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஐந்து பேர் குழு
இந்த முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனை குழுவில் ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ஜீன் ட்ரெஸ், அரவிந்த் சுப்ரமணியம், எஸ்.நாராயணன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.இந்தக்குழுவின் பணி என்ன? இவர்கள் எவ்வாறு இயங்குவார்கள் என்பது குறித்து தமிழக நிதியமைச்சர் பிடிஆரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த விவரம் பின்வருமாறு

சமூக நீதி
1. பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளில் பொதுவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாடு தொடர்பான குறிப்பாகப் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான சமமான வாய்ப்புரிமை வழங்குவதில் ஆலோசனை தர வேண்டும்.

உற்பத்தி மேம்பாடு
2. மாநிலப் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பான ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
3.மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதி ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகள் வழங்க வேண்டும்
4. மக்களுக்கு சேவை செய்வதற்கான மாநில திறனை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை.வழங்க வேண்டும்

புதிய திட்டங்கள்
5. புதிய திட்டங்கள் மற்றும் சாத்தியப்படக்கூடிய தீர்வுகளுக்கான ஒரு வலுவான ஆலோசனை மையமாகத் திகழ்வதுதான் இந்த ஐவர் குழுவின் பணியாகும்
6.முதலமைச்சர் அல்லது நிதியமைச்சர் கேட்கும் எவ்வித தீர்வுக்கும் ஆராய்ந்து சாத்தியப்படக்கூடிய சிறந்த சமூகப் பொருளாதாரத் தீர்வுகளை வழங்க வேண்டும்.

பொருளாதாரக் கவுன்சில்
இந்த பொருளாதார ஆலோசனை கவுன்சில் எப்படி இயங்க வேண்டும்?
1.பொருளாதாரக் கவுன்சிலைச் சேர்ந்த உறுப்பினர்கள் தேவையான பொழுதில் சந்திக்க வேண்டும்.
2. கவுன்சில் தனது குறிக்கோள்களை அடையத் தேவையான இயங்குதலைத் தானே முடிவு செய்துகொள்ளும் முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.,
3.கவுன்சில் வாய்மொழியாகவோ எழுத்துபூர்வமாகவோ அல்லது கொள்கை வடிவிலோ ஆலோசனைகளை வழங்கலாம்.
4. முதலமைச்சர் அல்லது அரசாங்கம் முன்வைக்கும் குறிப்பிட்ட தேவைகளுக்காக கவுன்சில் விரைந்து முடிவுகளைத் தரவேண்டும்" இவ்வாறு நிதியமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications