2026ல் 200 சீட் டார்கெட்..மாவட்ட செயலாளர்கள் மீது புகார்! திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த வார்னிங்
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்," ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், சில மாவட்டச் செயலாளர்கள் மீதும் நிர்வாகிகள் குறித்தும் புகார்கள் உள்ளன.. அனைத்து புகார்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தொடங்கி நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கேஎன் நேரு, சேகர் பாபு உள்ளிட்ட திமுக தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அந்த அரங்கில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதிய "40/40 தென் திசையின் தீர்ப்பு" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தினை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நாற்பதுக்கு நாற்பது வென்ற திமுக தலைவருக்கு வாழ்த்துக்கள், தி.மு.கழகத்தின் பவள விழா ஆண்டில் சென்னையில் எழுச்சிமிகுந்த முப்பெரும் விழா நடத்துவது, தமிழ்நாட்டுக்கு என்று எந்தச் சிறப்பு திட்டத்தையும் வழங்காமல், முறையான நிதி ஒதுக்கீடு செய்யாமல் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்," நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகள், வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சிதான். 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் இலக்கு. அந்தளவுக்கு நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்திருக்கிறோம். இதனை வாக்குகளாக மாற்ற களப்பணி அவசியம் என்பதை நிர்வாகிகள் புரிந்துகொள்ள வேண்டும்
ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. நிர்வாகிகள் குறித்தும புகார்கள் உள்ளன. அனைத்து புகார்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும். சார்பு அணிகளை மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அனைத்து பூத் கமிட்டிகளையும் செம்மைப்படுத்த வேண்டும்.
கழகத்தின் அனைத்து அமைப்புகளிலும் செப்டம்பர் 15க்கு முன்பாக பொது உறுப்பினர் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
மினிட் புத்தகம் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் உழைப்பின் அடிப்படையிலேயே உயர்வு இருக்கும் அரவணைத்துச் செல்பவரே மாவட்ட செயலாளர். வெற்றி பெறுபவரே வேட்பாளர். அமைச்சர்களும் கழகத்தின் அடிமட்டத் தொண்டர்களுக்கு உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும். முதலீட்டுகளை ஈர்க்க அமெரிக்காவில் இருந்தாலும் கழகத்தையும் அரசையும் கவனித்துக் கொண்டிருப்பேன். கலைஞர் 100 நாணயம் வெளியீட்டில் கலந்து கொள்ள வேண்டும். கழகத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க அர்ப்பணிப்போடு செயல்படுங்கள்." என்றார்.
-
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
தலைமை செயலகம் வந்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.. உதயநிதி ஸ்டாலின் மீது புகார் -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரங்களில் முரண்பாடு..? வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்












Click it and Unblock the Notifications