வைரஸ் காய்ச்சல் பாதிப்பு.. முதல்வர் ஸ்டாலின் விரைந்து நலம் பெற வேண்டுகிறேன்.. பாஜக தலைவர் அண்ணாமலை
சென்னை: வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விரைந்து நலம் பெற வேண்டுகிறேன் என பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தினமும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அதன்படி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அதேவேளையில் சில நிகழ்ச்சிகளை அவர் திடீரென்று ரத்து செய்தார். அதேபோல் நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் 'நடப்போம் நலம் பெறுவோம்' (Health Walk) என்ற சுகாதாரத்துறையின் சிறப்பு திட்டம் இன்று சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.

இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தார். ஆனால் அவர் பங்கேற்றவில்லை. இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல் (வைரஸ் காய்ச்சல்) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நேற்றும், இன்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு இருமல், காய்ச்சல் ஆகியவற்றுக்கான அறிகுறி இருந்துள்ளது.
இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரல் காய்ச்சல் பாதிப்பால் முதல்வர் ஸ்டாலின் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில்தான், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விரைந்து உடல் நல பெற வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள், விரைந்து நலம்பெற்று, மக்கள் பணிகளைத் தொடர வேண்டிக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக?












Click it and Unblock the Notifications