அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.. சட்டசபையிலேயே நன்றி சொன்ன மு.க.ஸ்டாலின்.. காரணமே வேற!
சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இருமொழிக் கொள்கை விவகாரம் தொடர்பாக வலியுறுத்தியதற்கு நன்றி சொன்ன மு.க.ஸ்டாலின், அடுத்த முறை டெல்லி செல்லும் போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பாகவும் வலியுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மத்திய பாஜக அரசு சிஏஏ மூலமாக சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களை வஞ்சித்தது. இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது.

பாஜக எதிர்ப்பு
பாஜக ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலம் வஞ்சிக்கிறது. அந்த வகையில் தற்போது வக்பு வாரிய சட்டத் திருத்தம் மூலமாக இஸ்லாமியர்களை வஞ்சிக்கிறது என்று தெரிவித்தார். தமிழ்நாடு அரசு கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மு.க.ஸ்டாலின் பேச்சு
இதுகுறித்து அதிமுக தரப்பில், வக்பு வாரிய அடிப்படையை தகர்க்கும் சட்டத்திருத்தம் என்று கருத்து கூறி ஆதரவு தெரிவித்தது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவை தவிர்த்து ஆதரவு தெரித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இருமொழிக் கொள்கை தொடர்பாக அவையில் நடந்த விவாதத்தின் போது ஒன்றை சொன்னேன்.
3 கார்களில் சென்ற இபிஎஸ்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருக்கிறார். எனக்கு யாரை சந்திக்க போகிறார் என்ற செய்தி கிடைத்திருக்கிறது என்று சொன்னேன். அதன்பின் டெல்லியில் கேட்ட போது, யாரையும் சந்திக்க வரவில்லை. எங்கள் கட்சி அலுவலகத்தை பார்க்க வந்திருப்பதாக கூறினார். ஆனால் மாலையில் 3 கார்களில் மாறி சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருக்கிறார்.
நன்றி சொன்ன முதல்வர்
அதற்காக நான் சந்திக்க வேண்டும், தவிருங்கள் என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் அங்கே சென்று, தமிழ்நாட்டின் உரிமைகளை கேட்டிருக்கிறேன். இருமொழிக் கொள்கை குறித்து பேசி இருக்கிறேன் என்று தெரிவித்தார். அதற்காக உள்ளபடியே அவையின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
வேண்டுகோள் வைத்த ஸ்டாலின்
அதேபோல் எப்படி இருமொழிக் கொள்கை தொடர்பாக பேசி இருக்கிறேன் என்று சொன்னாரோ, அதேபோல் அடுத்த முறை டெல்லி செல்லும் போது வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்தும் பேச வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பதாக தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அமித் ஷாவை 45 நிமிடங்கள் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு சார்பாக கல்வி நிதி, மீனவர்கள் பிரச்சனைகள் என்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்ததாக தெரிவித்தார்.
-
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம் -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications