தங்கை சாருமதி மறைந்த துயரம்! 64வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த துர்கா ஸ்டாலின்! முழு பின்னணி!
64வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த துர்கா ஸ்டாலின்
சென்னை: முதலமைச்சர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு நாளை 64வது பிறந்தநாள் ஆகும்.
இந்த பிறந்தநாளை துர்கா ஸ்டாலின் பெரியளவில் கொண்டாட விரும்பாததற்கு காரணம் அண்மையில் அவரது தங்கை மறைந்த துயரமேயாகும்.
இதனிடையே குடும்பத்தினரின் வாழ்த்துகளை மட்டும் துர்கா ஸ்டாலின் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 13
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நாளை 64வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். ஆண்டுதோறும் மார்ச் 13ஆம் தேதியன்று இவரது பிறந்தநாளை குடும்பத்தினர், பேரன், பேத்திகள் மற்றும் உறவினர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். துர்கா ஸ்டாலினும் புத்தாடைகள் அணிந்து கேக் வெட்டி தனது பேரன், பேத்திகளுக்கு அதனை பரிமாறி அன்பை வெளிப்படுத்தி வாழ்த்துக்களை பெற்றுக் கொள்வார்.

தங்கை மறைந்த துயரம்
இதனிடையே இந்தாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவர் தவிர்க்க விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. காரணம் அண்மையில் தங்கை சாருமதி மறைந்த துயரத்திலிருந்து துர்கா ஸ்டாலின் இன்னும் முழுமையாக மீளவில்லை எனக் கூறுகிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆறுதல் சொல்லி இப்போது தான் துர்கா ஸ்டாலினை அந்த துயரிலிருந்து மீட்டு வருகிறார்களாம்.

தயாளு அம்மாளிடம் ஆசி
இதனால் இந்தாண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்க விரும்பும் துர்கா ஸ்டாலின், கணவர் முக ஸ்டாலினோடு நாளை கோபாலபுரம் இல்லம் சென்று தயாளு அம்மாளிடம் ஆசி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆண்டுதோறும் பிறந்தநாளன்று தவறாமல் அவர் கோயிலுக்கு சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 1ஆம் தேதி ஸ்டாலின் 70வது பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் நாளை 64வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

ஆன்மிக நாட்டம்
தனது கணவர் ஸ்டாலின் நாத்திகர் என்றாலும் துர்கா ஸ்டாலின் தாம் ஒரு ஆத்திகர் என்பதை எக்காரணம் கொண்டும் மறைக்காதவர். கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ள இவர் அண்மையில் கூட சிறப்பு யாகம் நடத்தி கவனம் ஈர்த்திருந்தார். இவருக்கு உரிய சுதந்திரத்தை கணவர் என்ற முறையில் ஸ்டாலினும் தாராளமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications