Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒருதுளி கூட உணவின் தரம் குறைய கூடாது! ‘ஸ்பெஷல் கேர்’ எடுத்துக்கனும்! அதிகாரிகளுக்கு முதல்வர் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலை உணவுத் திட்டத்தில் பரிமாறப்படும் உணவின் தரம் ஒரு துளி கூட குறையக் கூடாது. நான் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.. உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு செய்வது போல், உணவு தயார் செய்ய வேண்டும். நீங்கள் 'ஸ்பெஷல் கேர்' எடுத்துப் பார்க்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம், அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இன்று முதல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்தநாளான இன்று அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Mk Stalin Government of Tamil Nadu Breakfast Scheme

தமிழகத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு முதற்கட்டமாக 38 மாவட்டங்களில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் ஒரு கோடியே 14 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

2023 ஆகஸ்ட் மாதம் திருக்குவளையில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசு பள்ளி மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் சுமார் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் இரண்டு லட்சத்து 23 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 3392 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுடன் உணவருந்தினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,” மிக, மிக மகிழ்ச்சியாக உங்கள் முன் நிற்கிறேன். பெற்றோரின் பாசத்தோடு நான் உருவாக்கிய திட்டம்தான் காலை உணவுத்திட்டம். பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியைப் போக்கும் திட்டம்தான் காலை உணவுத் திட்டம். அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு மாணவர் கூட பசியோடு பள்ளிக்குச் செல்லக்கூடாது. பல்வேறு திட்டங்கள் மூலம் உங்களுக்கு பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தபோதிலும் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தோம். சங்க இலக்கியத்தில் பசிப் பிணி போக்குவது குறித்து பல்வேறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள்தான் எதிர்காலத்தின் சொத்து என்பதால் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் வரப்பிரசாதம். காலை உணவுத் திட்டம் மூலம் பெற்றோரின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது.

காலை உணவுத் திட்டத்தில் பரிமாறப்படும் உணவின் தரம் ஒரு துளி கூட குறையக் கூடாது. நான் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு செய்வது போல், அரசு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தயார் செய்ய வேண்டும். நீங்கள் 'ஸ்பெஷல் கேர்' எடுத்துப் பார்க்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை பார்த்து, பார்த்து அரசு செயல்படுத்தி வருகிறது. நமது அரசு ஒருநாளாவது செயல்படாமல் இருந்திருக்கிறதா?. நாள்தோறும் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறோம். பொய் செய்திகளை பரப்பி அதில் குளிர்காய நினைக்கும் மக்கள் விரோத சக்திகளின் அஜன்டா பலிக்காது.

மாணவர்கள் படிப்பதற்கு எந்த தடையும் ஏற்படக் கூடாது என்பதே எனது எண்ணம். தமிழக மாணவர்கள் கல்வி பயில எந்த ரூபத்தில் தடை வந்தாலும், அதை தமிழக அரசு உடைக்கும். பசியோ, நீட் தேர்வோ, புதிய கல்விக் கொள்கையோ அது எந்த தடையாக இருந்தாலும் தகர்ப்போம். ஒன்றிய பாஜக அரசு அரசியலுக்காக அவசர நிலையை பற்றி இப்போது நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசி வருகிறது.

ஆனால், அவசர நிலையின்போது, பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வித்துறையை, ஒன்றிய அரசு தற்போது மாநிலப் பட்டியலுக்கு மாற்ற தயாராக இருக்கிறதா?. இந்த ஆக்கப்பூர்வமான செயலை அவர்கள் செய்வார்களா?. நீட் தேர்வை பல தலைவர்கள், மாணவர் அமைப்புகள் தற்போது எதிர்த்து வருகின்றன. தமிழகம் நீட் தேர்வை எதிர்த்தபோது முதலில் கேள்வி எழுப்பியர்கள் கூட தற்போது ஆதரிக்கின்றனர். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். கல்விதான் யாரும் திருட முடியாத சொத்து” எனக் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+