Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’.. சென்னை மாநகராட்சியின் முடிவுக்கு எஸ்டிபிஐ கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலை உணவுத் திட்டத்தை சென்னை மாநகராட்சி தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் பாஸ்டர் மார்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் பாஸ்டர் மார்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சுமார் 350 பள்ளிகளில் இந்த திட்டத்தின் மூலம் நாள்தோறும் 65ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், காலை உணவு தயாரிப்பை தனியார் நிறுவனத்துக்கு வழங்க சென்னை மாநகராட்சியால் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இந்நடவடிக்கை கண்டனத்திற்குரியது.

chennai corporation sdpi

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு கூறிவரும் நிலையில், திட்டத்தின் உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம், அதற்கான பணிகளில் ஈடுபட்ட சுய உதவிக்குழு மகளிர் பணியிழக்க நேரிடும். மேலும், தனியாருக்கு திட்டத்தை தாரை வார்க்கும் போது உணவின் தரம் குறைவதற்கும், அதன் மூலம் திட்டத்தின் நோக்கம் சீர்குலைவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.

அந்தந்த பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினர் மூலமாக மாணவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் போது சரியான நேரத்தில், சூடாக கிடைத்துவந்த காலை உணவு, 356 பள்ளிகளை சேர்ந்த 65 ஆயிரம் மாணவர்களுக்கு மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்களில் தனியார் நிறுவனம் மூலம் தயாரித்து வழங்கும் போது, மாணவர்களுக்கு சரியான நேரத்தில், ஆரோக்கியமான முறையில், சூடாக கிடைக்குமா என்கிற சந்தேகம் எழுகிறது. இது காலை உணவுத் திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும்.

கடந்த காலங்களில் அரசின் திட்டங்களை தனியாருக்கு தாரை வார்த்ததை கண்டித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்னர், தனியாருக்கு தாரை வார்க்கும் செயல்திட்டங்களை தொடர்ந்து கடைபிடிக்கத் தொடங்கிவிட்டது. இது திமுகவின் இரட்டை நிலையை அம்பலப்படுத்துகிறது.

ஆகவே, பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சியின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்தி, ஒருங்கிணைந்த சமூக நலத் திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, அரசின் திட்டங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+