2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்! விஜய்யின் முதல் கையெழுத்து
சென்னை: தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக விஜய் பதவியேற்ற நிலையில் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய் கட்சியான தவெகவுக்கு 108 இடங்கள் கிடைத்தன. இந்த நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் விஜய் கட்சிக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளன.

இதனால் தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களுடன் ஆதரவு அளித்த கட்சிகளின் பிரதிநிதிகளுடன் விஜய் ஆளுநர் மாளிகை சென்றார். ஆனால் ஆளுநர் கேரளா செல்வதாக கூறப்பட்டது. இதனால் விஜய் திரும்பி வீட்டுக்கு சென்றார்.
பின்னர் ஆளுநரின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து விஜய் ஆளுநர் மாளிகைக்கு சென்று அங்கிருந்து ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தையும் விஜய் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் விஜய் இன்று காலை 10 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார்.
இந்த நிலையில் அவர் போடும் முதல் கையெழுத்து எது என்பதை பார்க்கலாம். 200 யூனிட் மின்சாரம், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், மகளிர் உரிமைத் தொகை ரூ 2500, மதுவிலக்கு உள்ளிட்ட மக்கள் நலனை கருத்தில் கொண்டு அவர் முதல் கையெழுத்தாக போடுவார் என தெரிகிறது.
முதல்வரானதும் 5 ஆண்டுகளில் எத்தனை கோப்புகளில் கையெழுத்திட்டாலும் முதல் கையெழுத்து என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
2016-ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற போது 500 மதுக்கடைகளை மூடல், 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட ஐந்து திட்டங்களில் முதலில் கையெழுத்திட்டார்.
அதேபோல் 2021-ல் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதியேற்றதும் முதலில் மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், ரூ.4000 கொரோனா நிதியுதவி, ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட 5 திட்டங்களில் கையெழுத்திட்டார்.
அந்த வகையில் விஜய்யும் முதல் கையெழுத்தாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் கையெழுத்திடுவார் என சொல்லப்படுகிறது. தமிழக முன்னாள் முதல்வரான ஸ்டாலின், புதிய அரசு காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை ஆகிய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
-
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications