வாழும் வழிகாட்டி! முதுபெரும் தலைவர் சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை: முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவின் 102-ஆவது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டு அரசியலின் முதுபெரும் ஆளுமையான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் என்.சங்கரய்யா இன்று தனது 102 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ்நாட்டின் சமகால அரசியல் தலைவர்கள் பலருக்கும் வழிகாட்டியாகவும், லட்சியத் தலைவராகவும் திகழ்பவர் சங்கரய்யா.

சுதந்திரப் போராட்ட வீரராக, கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாட்டாளராக, பத்திரிகையாளராக, சட்டமன்ற உறுப்பினராக பல்வேறு பரிமாணங்களை கொண்டவர் சங்கரய்யா. 8 ஆண்டுகால சிறை, 3 ஆண்டுகால தலைமறைவு வாழ்க்கை என நாட்டு மக்களின் நலனுக்காக தியாகத் தழும்புகளை ஏந்தியவர் சங்கரய்யா.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, தகைசால் தமிழர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தகைசால் தமிழர் விருதைப் பெறும் முதல் தமிழ் ஆளுமையாக என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டார். அந்த விருதோடு வழங்கப்பட்ட ரூ. 10 லட்சத்தை முதலமைச்சரின் கோவிட் - 19 பேரிடர் நிவாரண நிதிக்கே வழங்கினார் சங்கரய்யா.
சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் 'தகைசால் தமிழர்' சங்கரய்யா அவர்களின் 102-ஆவது பிறந்தநாள்! பொதுவாழ்விலும் பொதுவுடைமை இலட்சியங்களைக் கடைப்பிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழிய பல்லாண்டு!" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications