ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு! இதற்கு மேல் தள்ளிப்போட வேண்டாம்! OK சொன்ன உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: திமுக இளைஞரணி மாநாடு ஏற்கனவே 2 முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இப்போது 3வது முறையாக தேதியை தேர்வு செய்து திமுக தலைமைக்கழகம் மூலம் அறிவிப்பு வெளியிட வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
டிசம்பர் 17ஆம் தேதி தேதி திமுக இளைஞரணி மாநாடு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை மழை வெள்ளம் காரணமாக டிசம்பர் 24ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்புகளால் மீண்டும் தேதி குறிப்பிடப்படாமல் திமுக இளைஞரணி மாநாடு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மாநாட்டை இனிமேலும் தள்ளிப்போட வேண்டாம் என நினைத்த திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், திமுக இளைஞரணி மாநாடு வரும் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட வைத்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு; "மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு, வருகிற 21-01-2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலத்தில் நடைபெறும்.''
இதனிடையே சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாடுக்காக 100 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இளைஞரணி மாநாட்டு மேடையிலேயே நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இருந்தும் சுமார் 5 லட்சம் இளைஞர்களை மாநாட்டிற்கு திரட்டும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
திமுகவில் எத்தனையோ சார்பு அணிகள் இருந்தாலும் அதில் பிரதான அணியாக விளங்குவது இளைஞரணி மட்டுமே என்பது கூடுதல் தகவலாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications