முதல்வர் ஸ்டாலின் பேசுறேன்! நல்லா இருக்கீங்களா? ஹெல்ப் லைன் மையத்தில் ஆய்வு! ஆச்சர்யத்தில் மக்கள்..!
சென்னை : சென்னை சோளிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் உதவி அழைப்பு மையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி அழைப்புகளை ஏற்று பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்வு மேலாண்மை திட்டம் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பவியல் துறை செயல்படுத்துகிறது.
முதல் கட்டமாக பொது மக்கள் தங்கள் குறைகளை அரசுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 வழியாக தெரிவிக்கும் வகையில், சென்னை, சோழிங்கநல்லூர் இராஜிவ்காந்தி சாலையில் நுாறு இருக்கைகளுடன், முதல்வரின் உதவி அழைப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

முதல்வர் ஆய்வு
இந்நிலையில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள முதலமைச்சரின் அழைப்பு மையத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தமிழக தொழில்துறை அமைச்சர் தாமு அன்பரசன் முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலர் சில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார் அப்போது பொதுமக்கள் தரும் புகார்கள் எவ்வாறு பெறப்படுகிறது அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

அழைப்பை ஏற்ற முதல்வர்
ஆய்வின்போது முதலமைச்சரின் அழைப்பு மையத்திற்கு வந்த பொது மக்களின் தொலைபேசி அழைப்புகளை ஏற்றுப் பேசிய முதலமைச்சர் அவர்களது குறைகள் குறித்தும் கேட்டறிந்தார் மேலும் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்களிடம் கனிவாக பேச வேண்டும் என்றும் அதிகாரிகள் மற்றும் அழைப்பு மைய பணியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

நலம் விசாரிப்பு
அப்போது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மருத்துவ உதவி தொடர்பாக கோரிக்கை வைத்திருந்த நிலையில் அவரை தொடர்புக்கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர், அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டதா? நன்றாக உள்ளீர்களா என கேட்டறிந்தார்.

பாராட்டு
புதுக்கோட்டை மாவட்ட துணை ஆணையர் ஒருவரை தொடர்பு கொண்ட தமிழக முதலமைச்சர் உதவி எண் மையத்தில் பொதுமக்கள் அளிக்கக்கூடிய புகார்கள் மீது காலதாமதம் செய்வது ஏன் என விளக்கம் கேட்டார். தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு பேசிய அவர் திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் புகார்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்ட வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்












Click it and Unblock the Notifications