சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் தமிழனின் ஆட்சி! வ.உ.சி, வேலுநாச்சியாரை யார் என கேட்க நீங்க யார்? விளாசிய முதல்வர்

Google Oneindia Tamil News

சென்னை : இந்தியை திணிக்க முயற்சிப்பவர்கள் ஆதிக்கத்தை திணிக்க முயல்வதாகவும், ஒரே மதம் மட்டும்தான் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஒரே மொழி தான் இருக்க வேண்டும் என நினைப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Recommended Video

    மத்திய அரசால் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்திகள் சென்னையில் கம்பீரமாக கவனம் ஈர்த்தது

    மொழிப் போர் தியாகிகள் நினைவு நாளை மாவட்ட கட்சி அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டும் என்று திமுகவினருக்கு கட்சித் தலைவர் முகஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மொழிப்போர் தியாகிகள் நாளில் எப்போதும்போல் வீரவணக்கம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது என குறிப்பிட்டிருந்தார்.

    அமராவதி ஆற்றில் 6 பேர் இறப்புக்கு காரணமே இதுதான்.. திமுக மீது ஓ.பி.எஸ் பகீர் புகார்.. பரபர அறிக்கைஅமராவதி ஆற்றில் 6 பேர் இறப்புக்கு காரணமே இதுதான்.. திமுக மீது ஓ.பி.எஸ் பகீர் புகார்.. பரபர அறிக்கை

    இந்தி மொழி திணிப்பு எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு அன்னைத் தமிழ்மொழி காக்க உயிர்த் தியாகம் செய்த தியாகிகளின் படத்தினை மாவட்டக் கழக அலுவலகங்களில் மலர்களால் அலங்கரித்து வைத்து, கழக மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், முன்னோடிகள், நிர்வாகிகள் அனைவரும் மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

    மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்

    மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்

    இந்நிலையில் திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. காணொளிக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின் தமிழ் மொழிக்காக திமுக நடைமுறைப்படுத்திய திட்டங்கள் குறித்தும், மொழிப்போர் தியாகிகளின் வீர உயிர்த்தியாகம் குறித்தும் பட்டியலிட்டு பேசினார். அதில் இந்தியை திணிக்க முயற்சிப்பவர்கள் ஆதிக்கத்தை திணிக்க முயல்வதாகவும், ஒரே மதம் மட்டும்தான் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஒரே மொழி தான் இருக்க வேண்டும் என நினைப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    யார் என கேட்க நீங்கள் யார்?

    யார் என கேட்க நீங்கள் யார்?

    தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் வாவுசி வேலுநாச்சியார் உள்ளிட்டவர்கள் யார் எனக் கேட்பதற்கு நீங்கள் யார் என கேள்வி எழுப்பிய அவர்,தமிழ் தமிழ் என்று பேசுவது குறுகிய மனப்பான்மை அல்ல என்றும் நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல இந்தி ஆதிக்கத்துக்கு எதிரானவர்கள் என பேசினார். மேலும் இந்தியை திணிக்க நினைப்பவர்கள் ஆதிக்கத்தின் குறியீடாக திணிக்க பார்க்கிறார்கள் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

    ஆதிக்க மனப்பான்மை

    ஆதிக்க மனப்பான்மை

    இந்தி தவிர்த்து மற்ற மொழி பேசுபவர்களை இரண்டாம் தர மக்களாக நினைக்கிறார்கள் எனவும், தமிழ் தமிழர்கள் என்றால் ஏனோ சிலருக்கு கசக்கிறது என கூறிய முதல்வர் ஸ்டாலின், வ.உ.சிதம்பரனாரை கப்பலோட்டிய தொழிலதிபர்தானே என்று டெல்லி அதிகாரி கேட்டுள்ளார், அவர் யாருக்கு எதிராக கப்பல் ஓட்டினார், இந்த புரிதல் கூட இல்லாதவர்கள், தமிழ்நாட்டை, தமிழ் உணர்வை எப்படி புரிந்துகொள்வார்கள் என கேள்வி எழுப்பினார். எந்த மொழியையும் கற்பதில் விருப்பம் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர வெறுப்பு சார்ந்ததாக இருக்கக் கூடாது எனவும் அவர் பேசினார்.

    தமிழகத்தில் தமிழனின் ஆட்சி

    தமிழகத்தில் தமிழனின் ஆட்சி

    திரும்பிய பக்கமெல்லாம் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது, தமிழ் வாழ்க என பெயர் பலகை வைத்து வள்ளுவருக்கு 133 அடியில் சிலை அமைக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான் என கூறிய முதல்வர் ஸ்டாலின், முதல்வர் கலைஞர் தான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கிக் கொடுத்தவர் எனவும், திமுக ஆட்சியில்தான் பள்ளிக்கல்வி முதல் கல்லூரி கல்வி வரை தமிழில் படிக்கலாம் என கொண்டு வந்தது திமுக அரசுதான் எனக் கூறிய முதல்வர் ஸ்டாலின், பள்ளித் தேர்வுகளை தமிழைக் கட்டாயம் ஆக்கியதும் தங்களது ஆட்சி தான், தமிழகத்தில் தமிழ்நாட்டில் தமிழனின் ஆட்சி, தமிழனத்தின் ஆட்சி நடைபெறுகிறது எனவும் முதல்வர் பேசினார்.

    English summary
    Tamil Nadu Chief Minister Stalin has said that those who try to impose hindi are trying to impose domination and those who think that there should be only one religion think that there should be only one language.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X