ஹெல்மெட்டை கட்டாயமாக்கினால் கெட்டப்பெயர் வரும்! தயங்கிய கலைஞர்-வாதாடிய டாக்டர்! ஸ்டாலின் ஃப்ளாஷ்பேக்
சென்னை: ஹெல்மெட்டை கட்டாயமாக்கினால் கெட்டப்பெயர் வரும் என்று கருணாநிதி தயங்கிய போது, மனித உயிரை காப்பதைவிட விமர்சனங்கள் பெரிதல்ல என்று மருத்துவர் ராமமூர்த்தி வாதாடியதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காணொலிக் காட்சி வாயிலாக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராமமூர்த்தி நூற்றாண்டு விழாவையொட்டி முதலமைச்சர் கூறிய ஃபிளாஷ்பேக் வருமாறு;
குடும்ப மருத்துவர்: ராமமூர்த்தி எங்கள் குடும்ப மருத்துவர் என்பதை தாண்டி எங்கள் குடும்ப நண்பர் என்று தான் முதலில் சொல்ல வேண்டும். மருத்துவர் ராமமூர்த்தி அவர்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்டகால நட்பு உண்டு. தலைவர் கலைஞர் அவர்களும், மருத்துவர் ராமமூர்த்தி அவர்களும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டால், இளமைக் கால நண்பர்கள் பேசிக் கொள்வதைப் போல இருக்கும்.

மிசாவின் போது எனக்கு சிகிச்சை: தலைவர் கலைஞரின் இலக்கிய ஆளுமை, எழுத்துநடை, ஆட்சி நிர்வாகத் திறன் மீது டாக்டர் ராமமூர்த்தி பெருமதிப்பு கொண்டிருந்தார். கலைஞர் மீது மட்டுமல்ல, என் மீதும் மருத்துவர் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். நெருக்கடி நிலைக் காலத்தில், மிசா சட்டத்தின்கீழ் நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். என்னைப் பார்ப்பதற்காக அனுமதி பெற்று வந்தவர் தான் மருத்துவர் ராமமூர்த்தி. எனது உடல்நிலையை கவனித்துக் கொண்டவர் டாக்டர் ராமமூர்த்தி.
ஹெல்மெட் கட்டாயம்: மருத்துவ உலகத்தை கடந்து, அவருக்கு சமூக ஆர்வமும், நாட்டு மக்கள் மீதான அக்கறையும் அதிகமாக இருந்தது. இருசக்கர வாகனங்களில் அதிவேக பயணத்தின் காரணமாக பெரும் விபத்தையும், உயிரிழப்பையும் சந்தித்து வருவதை அறிந்து, தலைக்கவசத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் வீட்டிற்கே வந்து வாதாடினார். எதையும் கட்டாயமாக்கினால் கெட்டப் பெயர் வந்துவிடும், உள்நோக்கம் கற்பிப்பார்கள் என்று முதலமைச்சர் கலைஞர் அதன் இன்னொரு பக்கத்தை எடுத்துச் சொன்னார்கள்.
விமர்சனங்கள் பெரிதல்ல: மனித உயிரை காப்பதைவிட விமர்சனங்கள் பெரிதல்ல என்று வலியுறுத்தியவர் டாக்டர் ராமமூர்த்தி. அந்த இடத்தில் மருத்துவர் என்பதை கடந்து மனிதாபிமான காவலராக அவர் காட்சியளித்தார். மிகப் புகழ்வாய்ந்த, நாட்டுப்பற்று மிகுந்த குடும்பத்தில் பிறந்த ராமமூர்த்தி அவர்கள், தனக்கெனத் தனிப்பாதையைத் தேர்ந்தெடுத்ததோடு, அதில் தனிச்சிறப்பான இடத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டவர். உயிர்காக்கும் துறையான மருத்துவத்துறையில், நரம்பியல் துறை வல்லுநராக - இந்தியாவின் முகமாகவே உலகம் முழுதும் அறியப்பட்ட சிறப்புக்குரியவர் டாக்டர் ராமமூர்த்தி அவர்கள். இந்திய நரம்பியல் அறுவை சிகிச்சை இயலின் தந்தை என்றே போற்றப்பட்டவர்.
உலகம் முழுதும் உரை: டாக்டர் ராமமூர்த்தி அவர்கள் உலகம் முழுதும் சென்று உரை நிகழ்த்தியுள்ளார், உலகெங்கிலும் இருந்து வல்லுநர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். நரம்பியல் துறையிலும், தலைப் பகுதியில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சைப் பிரிவிலும் பல முன்னெடுப்புகளை நிகழ்த்தியுள்ளார். புதிய பிரிவுகளை நிறுவியுள்ளார். புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இந்திய குடியரசு தலைவர்களாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி ஆகியோராலும், இந்தியப் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோராலும் மதிக்கப்பட்ட ஆளுமையாக இருந்துள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications