கருணாநிதியின் நிழலுக்கு வயது 80... சண்முகநாதனை சந்திக்க வீடு தேடிச்சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்..!
சென்னை: கருணாநிதியின் நிழலாக வலம் வந்து 48 ஆண்டு காலம் அவருக்கு உதவியாளராக இருந்த சண்முகநாதனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு தேடிச்சென்று சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை சற்றும் எதிர்பார்க்காத அவரது குடும்ப உறவினர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர்.
உடல்நிலை நலிவுற்று அண்மையில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன், இப்போது வீட்டிலும் செவிலியர்கள் கண்காணிப்பில் சிகிச்சையை தொடர்ந்து வருகிறார்.

கருணாநிதியின் நிழல்
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நிழலாக 48 ஆண்டுகாலம் அவரோடு பயணித்தவர் சண்முகநாதன். கருணாநிதியின் கண் அசைவை வைத்தே அவர் என்ன எதிர்பார்க்கிறார், யாரிடம் எதைக் கூறச் சொல்கிறார் என்பதை அறிந்துக்கொள்வார் சண்முகநாதன். தமிழக காவல்துறையில் சுருக்கெழுத்தராக பணியாற்றி வந்த சண்முகநாதனை கடந்த 1967-ம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தனது உதவியாளராக அழைத்துக்கொண்டார் கருணாநிதி.

மனக்கசப்பு
கருணாநிதியுடன் மனக்கசப்பு ஏற்பட்டு இரண்டு முறை கோபித்துக்கொண்டு புறப்பட்ட இவரை அடுத்த ஓரிரு நாட்களில் கோபாலபுரத்தில்ஆஜராக வைத்துவிடுவார் கருணாநிதி. சண்முகநாதனின் தந்தை மறைந்த போது இடுகாடு வரை நடந்தே சென்று அஞ்சலி செலுத்தி தனது உதவியாளரை அவரது ஊரார், உறவினர்கள் முன்னிலையில் பெருமைப்படுத்தியுள்ளார் கருணாநிதி. மு.க.அழகிரி, ஸ்டாலின், செல்வி, என எல்லோரும் சண்முகநாதன் பார்க்க வளர்ந்தவர்கள் தான்.

பிறந்தநாள்
இந்நிலையில் கருணாநிதி மறைந்தது முதலே மனமுடைந்து காணப்பட்ட சண்முகநாதனுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு அதற்காக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கூட வீட்டில் செவிலியர்கள் கண்காணிப்பில் சிகிச்சையை தொடர்ந்து வருகிறார். இதனிடையே முத்துவிழாவாக கொண்டாப்பட வேண்டிய சண்முகநாதனின் 80-வது பிறந்தநாளையொட்டி அவரை இல்லம் தேடிச்சென்று வாழ்த்தி வணங்கி வந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

நேரில் சந்தித்து
மேலும், சண்முகநாதனால் சரியாக பேச முடியாத போதும் ஸ்டாலினின் வருகையை எண்ணி மிகவும் மகிழ்ந்திருக்கிறார். நீர் ததும்பிய கண்களாலேயே ஸ்டாலினை உற்றுநோக்கிய சண்முகநாதன் அவர் இன்னும் பல்லாண்டு காலம் தமிழ் மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என வாழ்த்தியிருக்கிறார். இதனிடையே முதலமைச்சர் என்ற முறையில் ஸ்டாலினுக்கு இருக்கும் பரபரப்பான அலுவல் பணிகளுக்கு மத்தியிலும் தந்தையின் உதவியாளரை நேரில் காண வந்தது அவரது அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications