காலையிலேயே கரும்பும் புத்தாடையும் வழங்கிய முதல்வர்! ஆர்வமுடன் வாங்க வந்த ஆங்கிலோ இந்திய மூதாட்டி!
சென்னை: இன்று காலை வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், தொல்காப்பிய பூங்கா ஊழியர்களுக்கு கரும்பும், புத்தாடையும் வழங்கி காலையிலேயே அவர்களை திக்குமுக்காட வைத்தார்.
இதனிடையே அங்கு நடைபயிற்சி வந்திருந்த ஆங்கிலோ இந்திய மூதாட்டி ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலினிடத்தில் ஆர்வமுடன் கரும்பையும், புத்தாடையையும் பொங்கல் பரிசாக பெற்று மகிழ்ந்தார்.
அமைச்சர் மா.சுப்ரமணியனின் தனிப்பட்ட ஏற்பாட்டில் இந்த பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் நடைபயிற்சி
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை நடைபயிற்சியின் போது பொதுமக்களுடன் உரையாடுவது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என வெகுவாக கவனத்தை ஈர்த்து வருகிறார். கடுமையாக பனி கொட்டி வரும் சூழலிலும் அதைப்பற்றி பொருட்படுத்தாமல் நடைபயிற்சிக்கு புறப்பட்டு விடும் இவர், அரசின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் பற்றியெல்லாம் தமது நலன் விரும்பிகளுடன் கலந்து ஆலோசித்து பேசுவார்.

தொல்காப்பியப் பூங்கா
இதனிடையே இன்று சென்னை அடையாறு தொல்காப்பிய பூங்காவில் நடைபயிற்சி சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் ஏற்பாட்டில் பூங்கா ஊழியர்களுக்கு பொங்கல் திருநாள் புத்தாடையும், முழுக்கரும்பும் வழங்கினார். இதனிடையே இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட ஆங்கிலோ இந்திய மூதாட்டி ஒருவரும் முதலமைச்சரிடம் ஆர்வமுடன் பொங்கல் பரிசு பெற்றுச் சென்றது தான்.

கிஃப்ட் பாக்ஸ்
தொல்காப்பிய பூங்கா ஊழியர்களுக்கு சேலை, கரும்புடன் சேர்த்து கிஃப்ட் ஹேம்பர் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. அதில் என்ன கொடுக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை. தொல்காப்பிய பூங்காவை பொறுத்தவரை கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கடந்த 2007ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது குறிபிடத்தக்கது.

கோல் இல்லை
இதனிடையே எப்போதும் காலை வேளை நடைபயிற்சியின் போது அக்குபிரஷர் மருத்துவ குணம் கொண்ட கோல் ஒன்றை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று அதை எடுத்துவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications